| உயிரறிவை மறைக்கும் மலம் அவ்வுயிரின்பாலடங்கும். அம் மலசத்திகள் ஈண்டுக் கூறப்பட்ட உயிரினது சத்தியின்பால் அடங்கும். இனி மாயையும் கன்மங்களும் அவ் வுயிர்ச்சத்தியின் பாலே அடங்குவனவாம். (வி - ம்.) இது மலத்தினும் உயிர் வியாபகமானது; உயிரினும் சத்தி வியாபகம்; சத்தியினும் இறைவன் வியாபகமுடையன் என்றவாறுமாம். (364) | | வியாபக வியாத்தி யான்மா வினின்விளங் கமலன் சத்தி | | | வியாப்பிய வியாத்தி யான்ம சத்தியின் விரவு மாயை | | | வியாபக வியாப்பி யங்க ளின்றியே சமத்தின் மேவும் | | | வியாத்தியே யுயிரு மொன்றாய் விரவிருண் மலமு மாதோ. |
(இ - ள்.) உயிரினில் விளங்காநின்ற இறைவன் சத்தி அதற்கு வியாபகமாய்நின்றே அதனோடு சமமாகவும் நிறைந்துநிற்கும். இனி உயிர்ச்சத்தியிற் கலந்த மாயை அதற்கு அடங்கிநின்றே அதனோடு சமனாகவும் நிறைந்து நிற்கும். இனி உயிரும் அதனோடு இரண்டறக் கலந்த ஆணவமலமும் தம்முள் மிகையும் குறையும் இல்லாத சமமானதொரு நிலையினையுடையனவே யாகும். (வி - ம்.) வியாபகம் - யாண்டுமிருத்தல். வியாப்பியம் ஒன்றன் அகத்தே அடங்கி நிறைதல். வியாத்தி - சமனிறைவு. (365) | | வியாபக மலமான் மாவுக் கென்றிடின் வீடு சேரா | | | வியாப்பிய மலமான் மாவுக் கென்றிடின் விரவா பந்தம் | | | விபாபக வியாப்பி யங்க ளின்றியே சமத்தின் மேவு | | | வியாத்தியே நீக்க நீங்கி விமலனி லடங்கு மாற்றால். |
(இ - ள்.) ஆணவமலம் உயிரினும் மிக்க நிறைவுடையதென்னின் உயிர்கள் எக்காலத்தும் விடுதலை பெறமாட்டாது. இனி ஆணவமலம் உயிர்க்கு அடங்கியதொரு நிறைவுடைத் தென்றாலோ உயிர் அதனாற் கட்டுண்டிரா. இவை இரண்டும் இறைவனால் விலக்குண்டு அவன் பாலே அடங்குதலாலே இவையிரண்டும் தம்முள் மிகையும் குறையும் இல்லாத சமனிறைவாகிய வியாத்தியே என்றுணரலாம். (வி - ம்.) மலம் - ஆணவமலம். வீடு - விடுதலை. பந்தம் - கட்டு. (366) | | நீக்கற விராவி நின்ற நிமலனு ளிருக்குங் காலும் | | | தாக்கிய மலமெவ் வாறு தணக்குமென் றையங் கொள்ளல் | | | பூக்கஞ றருவி னீரம் புலர்பரு வத்துண் மேய | | | தீக்கடை பவனா லோங்கிச் செறிந்தெலாந் தானே யாகும். |
(இ - ள்.) அங்கிங் கெனாதபடி யாண்டும் நிறைந்துநின்ற இறைவன் உள்ளே இருக்கவேயும், உயிரைக் கட்டிய ஆணவமலம் பின்னர் |