பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்563

எவ்வாறு உயிரினின்றும் அகலும்? என்றொரு ஐயத்தைக் கொள்ளாதே. மலர் செறிந்த மரத்தினுள்ளே அது பசுமையா யிருக்குந் துணையும் வாளாவிருந்த நெருப்புப்பின் அம்மரம் ஈரம் புலர்ந்துழித் தீக்கடைவோனாற் றூண்டப்பட்டு வளர்ந்து அம்மரமுழுதும் பற்றி அனைத்தையும் தன்மயமேயாக்கிவிடுதல் கண்டாயல்லையோ; அங்ஙனமே இதனையும் கொள்க.

(வி - ம்.) மலத்தாற் கட்டுண்ட உயிரின்கண் அது பக்குவமெய்துங்காறும் வாளாவிருந்து அம்மலம் பரிபக்குவமுற்றவுடன் இறைவன் அதனைக் கெடச் செய்வன் என்றவாறு.

(367)

 கதிரவ னெழுத லோடுங் கஞலிரு ளென்ன மாயும்
 முதிர்மலம் விளக்கி னாக்கை முகந்ததன் வினைபோங் காறும்
 வதியும்வாள் விழியி னாவி வாங்கிய வருளி னின்றும்
 பதிவயிற் பண்டே நின்ற பான்மையி னுணர்ந்தே நிற்கும்.

(இ - ள்.) ஞாயிற்று மண்டிலம் தோன்றியபொழுதே நிரம்பிய இருள் (தான் கெடாதே) தனது சத்திகெட்டுப் போதல் போன்று ஆணவமலம் உயிரின்கண் அருள் மிக்கபொழுது சத்திகெட்டொழியும். உயிர் தான் எடுத்துக்கொண்ட உடல் முகந்துகொண்ட பிராரத்தவினை முடியுந் துணையும் விளக்கின் முன்னின்ற விழி இருளினை உணர்ந்தும் உணராமலும் இருத்தல் போன்று தன்னை விழுங்கிக்கொண்ட அருளினூடே யிருக்கவேயும் பண்டுபெத்த நிலையிலே இறைவன்பாலிருந்தும் உலகினை உணர்ந்து நின்றாற்போன்றே உலகினை உணர்ந்தே யிருக்கும்.

(வி - ம்.) கஞலுதல் - செறிதல். முதிர்மலம் - ஆணவமலம். வினை - பிராரத்தம்.

(368)

 நுண்ணியன் சத்திக் கண்ண னுண்ணிய ளுயிர்க்குச் சத்தி
 நுண்ணிய துயிர்தன் சத்திக் கதுவுநுண் ணியது நோய்க்குத்
 திண்ணிய விந்த நோயைத் தீர்மருந் துடலே தீர்ப்பான்
 அண்ணலே யவனோ யாள னலன்மருத் துவன்வே றில்லை.

(இ - ள்.) இறைவன் இறைவியினுங்காட்டில் நுண்ணியன். அச்சத்தி உயிரினுங் காட்டில் நுண்மையுடையள். அவ்வுயிர்தானும் அதன் சத்தியினுங்காட்டில் நுண்மையுடையது. அவ்வுயிர்ச்சத்தி மலத்தினுங் காட்டில் நுண்ணிது. திண்ணிதான இந்த மலமாகிய நோயைத் தீர்க்கும் மருந்தே உடல். மருத்துவன் இறைவனே, அவன் அந்நோயாற் பற்றப்படாதவன். அவனையன்றி மருத்துவன் வேறுயாருமில்லை.

(வி - ம்.) நோய் - மலம். தீர்மருந்து - வினைத்தொகை. மலத்தாற் பற்றப்படாதார் பிறரிலர் ஆகலின் மருத்துவரும் பிறர்இலர் என்றவாறு.

(369)

 உருத்திரன் சத்து வத்தி னிராசதத் துவண வூர்தி
 உருத்தமோ குணத்தின் வேதன் றனையுயிர்த் துவரா லாக்கி