பக்கம் எண் :

564தணிகைப் புராணம்

 இருத்திமாய்த் தவரோ டெல்லா மிறுக்குமவ் விறையை யுந்தக்
 கருத்தரு ளொருவ னாகக் கருதுறிற் கழுவா யின்றே.

(இ - ள்.) பரமசிவன் சத்துவகுணத்தினின்றும் உருத்திரனையும் இராசதகுணத்தினின்றுந் திருமாலையும் தமோகுணத்தினின்றும் உருவமுடைய பிரமதேவனையும் தோற்றுவித்து இம்முத்தேவர்களானும் படைப்பித்து நிறுத்தி அழித்துப் பின்னர் அத்தேவரோடும் அனைத்தையும் அழித்தருளுவன், அத்தகைய முழுமுதல்வனை இக்கடவுளருள் ஒருவனாகக் கருதுவாரெனின் அத்தீவினைக்குக் கழுவாயொன்று யாம் நூலிற் கண்டிலேம்.

(வி - ம்.) உருத்திரன் - சீகண்டபரமன். உவணம் - கருடன். உருவேதன் என இயைக்க. வேதன் - பிரமதேவன். உவர் - இவர். உந்த - இந்த.

(370)

 பருவமிக் குடையோ ரெல்லாம் பண்டைவல் வினையி னோடும்
 இருண்மல மாதி மூன்று மிரிதர வீண்டே முத்தி
 மருவுவர் பருவத் தாழ்வான் மலரடி கலக்க மாட்டா
 தொருவிலன் புஞற்றி னோர்க ளூர்த்துவ புவன நண்ணி.

(இ - ள்.) மலபரிபாகமும் இருவினை யொப்பும் கைவரப்பெற்ற சான்றோர் எல்லாம் பண்டைப் பிறப்புக்களிலே ஈட்டி வலிய வினைகளோடு ஆணவ முதலிய மூன்று மலமும் தஞ்சத்திகெட்டொழிய இம்மையிலேயே இவ்வுலகத்திலேயே பரமுத்தியிற்றலைப்படுவர். இனிப் பருவக் குறைவு காரணமாக இங்ஙனம் இறைவன் திருவடிகளை எய்தமாட்டாமல் நீங்காத அன்பினாலே சரியை முதலிய நெறிகளில் நின்றொழுகினோரும் சுத்தவித்தியா புவனங்களை எய்தி.

(வி - ம்.) பருவம் - மலபரிபாகம். இருண்மலம் ஆதிமூன்று - ஆணவம், மாயை, கன்மங்கள். பருவத்தாழ்வு - போதிய பரிபக்குவமின்மை. ஊர்த்துவ புவனம் என்றது சுத்தவித்தியாபுவனத்தை.

(371)

 அளப்பரும் போகந் துய்த்திட் டகிலமு மொடுங்கும் போது
 வளப்படு மிறைவன் பாத மருவுவர் சில்லோர் சில்லோர்
 திளைப்புறு திதியா தாரஞ் சேர்ந்துவீ டுறுவர் சேர்ந்த
 தளைப்புறு திதிவீழ் காலைச் சிவத்தினைச் சார்வர் சில்லோர்.

(இ - ள்.) அவ்விடத்தே எல்லையற்ற இன்பத்தை நுகர்ந்திருந்து முழுவதும் ஒடுங்கவரும் பேரழிப்புக் காலத்தே வளம்படுதற்கிடமான இறைவனுடைய திருவடிகளை இவருட் சிலர் எய்தாநிற்பர்; ஏனையோர் நுகர்தற்கிடமான நிறுத்தற் காலத்திலே இறைவன் ஆசிரியனை அதிட்டித்துச் செய்யும் சாதரா தீக்கைபெற்றுப் பரமுத்தியினை எய்துவர். வேறு சிலர் பந்தமுறுத்தும் நிறுத்தற் காலந் தீர்ந்த அழிப்புக் காலத்தே நிராதார தீக்கை பெற்றுப் பரமுத்தியினை எய்துவர்.

(வி - ம்.) திதி - நிலைப்புக்காலம். ஆதாரம் ஆதார தீக்கை என்க.

(372)