| | படைப்புறும் போது சில்லோர் படைப்பவ ராவர் சில்லோர் | | | விடைப்புறு பாச நீங்கிச் சிவத்தினை விரவு வார்கள் | | | உடைப்பெருஞ் செல்வ மான யோகமீ துறுதல் வல்லார் | | | கடைப்பிடித் தொழுகு மற்றைக் கருமயோ கமும்விள் வாமால். |
(இ - ள்.) வேறுசிலர் படைத்தற் காலத்தே படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் இயற்றும் அதிகாரிகளாவர். வேறுசிலர் ஆண்டிருந்தவாறே முனைப்புடைய மலங்கள் அகலப்பெற்றுப் பரமுத்தியிற் கலப்பர். இனி, தாம்பெற்றுள்ள பெருஞ்செல்வமே போன்று கரும யோகத்தைப் பேணி அந்நெறியிற் செல்லுதல் வல்லார் கடைப்பிடியாகக் கொண்டொழுகாநின்ற கருமயோகத்தின் இயல்பினையும் கூறுவேம் கேட்பாயாக. (வி - ம்.) விடைப்புறுதல் - முனைப்புறுதல். மான - போல. (373) | | செய்பவன் கருமஞ் சேரும் பயனது கொடுப்பா னுண்டென | | | றெய்திய வுளத்த னாகி யிருண்மல பலிதேய்ந் துட்கப் | | | பொய்படு புலனைவென்று பொருந்துமுட் பொருள்க ளெல்லாம் | | | கைபடு நெல்லி யென்னக் காண்பவன் யோகி யாவான். |
(இ - ள்.) செயலைச் செய்பவனாகிய உயிரும் அவ்வுயிராற் செய்யப்படும் வினையும் அவ்வினையாலுண்டாகும் பயனும் அப்பயனைக் கொடுக்கும் இறைவனும் உண்டென்று ஆராய்ந்து தெளிந்த நெஞ்சமுடையவனாகி ஆணவமலத்தின் வலிமைகெட்டொழியப் பொய்ப்பொருளிலே சென்று வீழாநின்ற ஐம்பொறிகளையும் அடக்கித் தன்னோடு பொருந்தாநின்ற உடல் முதலிய பொருள்களின் இயல்பெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோன்று ஐயந்திரிபற உணர்ந்துகொண்டவனே யோகியாந் தகுதியுடையன். (வி - ம்.) செய்பவன் என்றது உயிரை. கொடுப்போனென்றது இறைவனை. புலன் : ஆகுபெயர்; பொறி என்க. உட்பொருள்; நாடி வளி முதலியனவுமாம். (374) வேறு | | விலங்கு வாளா வாதியா னச்சமே வாமை | | | அலங்கு பூந்தரு நிரந்தழ கார்ந்துராய் மாந்தர் | | | குலங்க ளண்முறா விடத்தினிற் கொழுஞ்சுட ருறுத்தி | | | இலங்க வாக்கிய குகையிருந் தியோகுசெய் யிடமாம். |
(இ - ள்.) விலங்கு வாள்போலுங் கொடிய பாம்பு முதலியவற்றால் அச்சம் உண்டாதற்கு ஏதுவாகாததும் அசையாநின்ற மலர்மரங்கள் நிரம்பி அழகுடைத்தாயதும், மாந்தர்கூட்டம் நெருக்கமாக அணுகி வரப்படாததுமாகிய தோரிடத்தே, விளக்கு முதலியவற்றாற் றிகழும்படி அமைத்த குகையே இருக்கையினமர்ந்து யோகஞ் செய்தற் கேற்ற இடமாகும். |