| (வி - ம்.) மாந்தர் உராய் அண்முறா இடம் என்க. கொழுஞ் சுடர் - விளக்கு. குகை - மலைக்குகை; குடில் முதலியவற்றைப் பொதுவாகக் குறித்து நின்றது. (375) | | பிணியி னாரகத் தாதர விலார்பொருள் பெட்கும் | | | தணிவி னெஞ்சினார் சாலவுங் கருமஞ்செய் தக்கோர் | | | பணிக ளாரியற் குஞற்றுநர் பசிப்பிணி மிக்கோர் | | | திணிகொ ளித்தகை யார்க்கிந்த யோகஞ்சேட் படுமே. |
(இ - ள்.) பிணியாளரும், உள்ளத்திலே இறையன்பிலாதவரும், பொருளை விரும்பும் அமைதி யில்லாத நெஞ்சமுடையோரும், வினையிடத்தே பற்றுடையோரும், ஆசிரியனுக்குத் தொண்டியற்றுவோரும், பசிபொறுக்கு மதுகையில்லாதோரும், இத்தகைய பண்புகள் செறிந்த பிறகும் ஆகிய இவர்க்கெல்லாம் இக்கரும யோகம் மிகவும் சேணிடத் துள்ளதாகும். (கை கூடாதாம்). (வி - ம்.) ஆதரவு - இறையன்பு. பெட்கும் - விரும்பும். தணிவு - அமைதி. செய்தக்கோர் - செய்யுந் தகுதியுடையோர். சேட்படும் என்றது பொருந்தாது என்றவாறு. (376) | | உச்சிப் பின்னொரு கால்வறி தூணுண்டு பானெய் | | | நச்சு நல்லுண விழித்தகு மூனொடு நயவா | | | திச்சை தோன்றுறி னஞ்சியங் கடக்குமித் தகையில் | | | பொச்ச மில்லவர்க் கண்மையிற் புகுதரு மதுவே. |
(இ - ள்.) அவ்வியோகநிலை, உச்சிப் பொழுதின் பின் ஒரேமுறை எளிய உணவினை உட்கொண்டும், பால் நெய் முதலிய விரும்புதற்குக் காரணமான நல்லுணவுகளையும் இழிக்கத்தக்க ஊன் உணவினையும் விரும்பாமலும் காம முதலியன தோன்றுங்கால் அவற்றை அஞ்சி அடக்கிவிடுதலும் ஆகிய இத்தகைய மாண்போடு பொய்ம்மையும் இல்லாதவர்கட்கே கைகூடு மியல்பிற்று. (வி - ம்.) யோகம் உண்டு நயவாது அஞ்சி அடக்கும் இத்தகைமை யோடு பொச்சம் இல்லவர்க்கே அண்மையிற் புகுதரும் என்க. (377) | | பதும மாதிய வாதனத் தொன்றுறப் பயின்று | | | விதுவி ராஞ்சடை விமலனை விமலையை விமலம் | | | கதுவு மாரியன் றனைவழி பட்டனர் காண்பார் | | | புதுவ தாய்ப்பயில் வான்புகு வாருப யோகம். |
(இ - ள்.) தாமரையிருக்கை முதலிய இருக்கைகளுள் வைத்துத் தமக்குப் பொருந்தியதொரு இருக்கையிலமர்ந்து, பிறைசூடிய பெருமானாகிய இறைவனையாதல், இறைவியையாதல், தூய்மையை மேற்கொண்ட தக்கிணாமூர்த்தியையாதல் வழிபாடுசெய்த உள்ளத்துள்ளே காண்பார். இனி, புதுவதாக யோகஞ் செய்தற்குப் புகுவோரியற்றும் செய்கைகள் வருமாறு. |