| (வி - ம்.) யோகு - யோகம். இதயத்தை நாண்மலராகவும், அம்மலரிடத்தே பெருவிரலளவிற்றாக ஒரு சிவலிங்கமுளதாகவும், அச்சிவலிங்கத்தைப் பூசைப் பொருள்களெல்லாம் மனதானே படைத்துக் கொண்டு வழிபடுவார் என்றவாறு. கதிய - கதுவிய. இயமமும் நியமமும் இதனுள் அடக்கி யோகவுறுப்பு (எட்டென்னாது) ஆறென்றார். (381) வேறு | | திருத்தகு பிராணா யாமமே பிரத்தி | | | யாகாரந் தாரணை தியானம் | | | உரைத்தமந் திரமே சமாதியவ் வாறா | | | மூன்றிநா சியின்வல மிடத்தான் | | | மருத்துமிழ்ந் திடப்பான் மறித்துளே வலத்தால் | | | வாங்கியவ் விரண்டையுஞ் சிறைத்து | | | விருத்தமொன் றின்றிக் கும்பித்தல் பிராணா | | | யாமமென் றுரைப்பர்மே தக்கோர். |
(இ - ள்.) யோகத்திற்குச் செல்வமாந் தகுதியையுடைய பிராணாயாமமும், பிரத்தியாகாரமும், தாரணையும், தியானமும், முற்கூறப்பட்ட மந்திரமும் சமாதியும் என்பனவே முற்கூறப்பட்ட ஆறு உறுப்புக்களுமாம். இவற்றுள் முன்னின்ற பிராணாயாமமாவது - நாசியின் வலப்பகுதித்தொளையை விரலாலூன்றி அடைத்து இடப்பால் தொளையினாலே மூச்சுக்காற்றினை வெறியேற்றிப் பின்னர் இடப்பகுதியை அடைத்து வலத் தொளையானே மூச்சினை உள்ளே இழுத்துப் பின் இரண்டையும் தடுத்து முரணின்றி வயிற்றகத்தே காற்றினை நிறுத்துதலேயாகும் என்று சான்றோர் கூறுவர். (வி - ம்.) திரு - செல்வம். விருத்தம் - முரண். (382) | | இதுமுறை பிறழின் வருத்தமிக் கடுக்கு | | | மெய்திய வருத்தந்தீர் பாக்குக் | | | கதுவிய வாதப் பிணிக்கழ றன்னைக் | | | கனற்பிணிக் கறலினை யறலின் | | | முதிர்பிணிக் கனலை யுடலிடைத் தியான | | | முற்றுறப் புரிவது செய்வர் | | | பொதிபசி புனலின் வேட்கையுந் தணிப்பர் | | | பொழிதரு மமிழ்தபா வனையால். |
(இ - ள்.) இப்பிராணாயாமஞ் செய்யுமிடத்தே அதற்கு விதித்த முறை பிறழச் செய்யப்படின் மிகுதியாக நோயுண்டாகும். அங்ஙனம் உண்டாய நோய் தீர்வதற்கு, அந்நோய் வாதநோயாயின் தீயினையும், தீயான் உற்ற நோயாயின் நீரினையும், நீரான் உற்ற நோயாயின் நெருப்பினையும், அந்நோயுற்ற உறுப்புக்களிலே நின்று மிகுவதாகத் தியானஞ் |