| கடையாய பிராணாயாமம். இவ்வளவு வலியுடையார்க்காம். வலியின்மையால் நடுங்கும் மனமுடையோர்க்கு ஏற்ற மாத்திரை கூறுமிடத்து ஒருமுறை கையை நொடிக்கும் பொழுதாகிய ஒருமாத்திரை என்க. (வி - ம்.) மலர்க்கரம் என்புழி உவமை வாளாநின்றது. துலக்குறுதல் - நடுங்குதல் எனவே மாட்டாமையுடையார் என்றவாறாயிற்று. (385) | | பிரத்தியா கார மனம்பொறி வழியிற் | | | பெயர்தரா தசைவற நிறுத்தல் | | | உரத்தொடு மிதயத் துறுத்திய பொருளி | | | னுய்த்தது நிறுத்தறா ரணையவ் | | | வரத்தொடை யிறையை யிடைவிடா தறிவி | | | னறிவது தியானமந் திரமுன் | | | உரைத்தனஞ் சமாதி யுருவிறந் துண்மைப் | | | பொருளினோ டிரண்டறக் கலத்தல். |
(இ - ள்.) நெஞ்சத்தை மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகள் வாயிலாய் ஊறு முதலிய புலன்களில் செல்லாமல் அசைவின்றி நிறுத்துதல் பிரத்தியாகாரம் எனப்படும். அந்நெஞ்சத்தை வலிமையோடும் இதயத்திலே நிலைநிறுத்தப்பட்ட பெருவிரலளவிற்றாகிய அருட்குறியின்கட் செலுத்தி அதன்கண் நிலையுறச் செய்தல்தாரணையெனப்படும். பாம்பாகிய மாலையையுடைய அவ்விறைவனை இடையறாமல் நெஞ்சத்தே உணர்ந்திருத்தல் தியானம் எனப்படும். மந்திரத்தியல்பு முன்னரே கூறியுள்ளேம். இனி நெஞ்சம் தனக்குருவங் கொடுக்கும் தான் என்னும் செருக்கினுநீங்கி மெய்ப்பொருள் தானேயாய் இரண்டறக் கலந்து விடுதலே சமாதி என்பதாம். (வி - ம்.) உரம் - வலி. உறுத்திய பொருள் பாவனையான் நிலை நிறுத்தப்பட்ட அருட்குறி. அரத்தொடை - பண்புத்தொகை, பாம்பாகிய மாலை என்க. அரா என்பது ஈற்றாகாரம் குறுகியது. (386) | | வளிநடு நாடி யியங்குறிற் சமாதி வாய்க்குமாற் கிளந்திடு முறையே | | | தெளிதரு மாறு மொன்றினொன் றுயருஞ் சிறப்புறு மிந்தயோ கத்தில் | | | களிதரு முளத்தர் கணிப்பறு மறையா திகளெல்லாங் கரையவும் வல்லார் | | | ஒளிதரு மிருநாற் சித்தியு மவர்க்கே யுள்ளங்கை நெல்லியங் கனியே. |
(இ - ள்.) உயிர்க்காற்று (இடைகலை பிங்கலை யிரண்டினும் இயங்காமல்) நடுநாடியாகிய சுழிமுனையிலே இயங்குங்கால் சமாதிநிலை கை கூடுவதாம். ஈண்டுக் கூறப்பட்ட முறையிலேயே தெளியப்பட்ட பிராணாயாம முதலிய ஆறுறுப்புக்களும் ஒன்றற்கொன்று சிறப்புறும். இந்தக் கருமயோகத்திலே பொருந்தி மகிழும் நெஞ்சம் வாய்க்கப் பெற்றோர் வேத முதலிய எண்ணிறந்த மெய்ந்நூல்க ளனைத்தையும் எளிதினுணர்ந்து ஓதவும் வல்லவராவார். புத்தொளி தருதற்கிடமான எட்டுச் சித்திகளும் அப்பெரியோர்க்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்று எண்மைய வாகும். |