| (வி - ம்.) வளி - உயிர்க்காற்று. நடுநாடி - சுழிமுனை. ஒளி - புகழுமாம். (387) | | அணுவினு நுழைநுண் ணுருக்கொள லாழ்ந்த | | | வளற்றிடை யஃதொட்டா தியங்கல் | | | மணிநெடு வரையிற் பெருத்தல்வேட் டனவெவ் | | | வளங்களுஞ் செறிதலா யிரவர் | | | திணிமுலை திளைத்தல் பெருவலி யினருஞ் | | | சென்றடி பேணல்யா வர்களும் | | | தணிவற விழைதல் வலியருந் தடாமை | | | சாற்றிய விவைகளெண் சித்தி. |
(இ - ள்.) நுண்ணணுக்களினும், நுழைதற்கேற்ற நனிநுணுகிய உருவத்தைக் கொள்ளுதலாகிய அணிமாவும், ஆழ்ந்துள்ள சேற்றினுள் அச்சேறு ஒட்டாமல் (பிள்ளைப்பூச்சிப்போல்) இயங்குதலாகிய இலகிமாவும், அழகிய நெடிய மலைபோன்று பெருத்த உருவங்கொள்ளலாகிய மகிமாவும், தாம் வேண்டிய உருவங்கொண்டு விரும்பியவற்றை நுகர்தலாகிய பிராத்தியும், ஆயிரமகளிரை ஒரே காலத்துப் புணர்தலாகிய பிராகாமியமும், மிக்க வலிமையுடைய கூற்றுவன் முதலிய தேவர்களும் தம்மை வந்து வணங்கும்படி செய்தலாகிய ஈசத்துவமும், எல்லோரும் தம்மைப் பெரிதும் விரும்பும்படி செய்தலாகிய வசித்துவமும், மிக்க வலிமையுடைய கூற்றுவன் முதலியோரானும் வெல்லப்படாமையாகிய வசிதையும் என ஈண்டுக் கூறப்பட்டவைகளே எண்வகைச் சித்திகளுமாம். (வி - ம்.) அளறு - சேறு. வரையில் - வரைபோன்று. வலியினர் கூற்றுவன் முதலிய தேவர் என்க. (388) | | மறுமையி லிறைவ னுலகினி லவன்றன் | | | மாணுரு வெடுத்தமர்ந் திருப்பர் | | | கொறுகொறுத் துழலு மலக்குறும் பனுக்குங் | | | கோணைமெய்ஞ் ஞானமாம் வெறுக்கை | | | பெறுவதற் கடுத்த நிமித்தமீ தல்லாற் | | | பேருல கத்தில்வே றில்லை | | | உறுதவ முறையி னுறழ்ந்தவர் கழுவா | | | யுஞற்றுமத் திறமினி யுரைப்பாம். |
(இ - ள்.) சிவயோகச் செயலுடையோர் மறுமையினுஞ் சிவலோகத்தே சென்று அவ்விறைவன் உருவமே தாமுமுடையராய் அமர்ந்திருப்பர். உயிர்கள் நெஞ்சங் கொறுகொறுத்துத் துன்பத்திலே உழலுதற்குக் காரணமான மலப்பகையை அழிக்கும் அழிவில்லாத மெய்யுணர்வாகிய செல்வத்தைப் பெறுதற்கு ஏற்ற கருவி இக்கருமயோகமன்றி இவ்வுலகத்திற் பிறிதில்லை. இனி மிக்க தவவொழுக்கத்தே பிறழ்ந்தவர் அத்தீவினைதீரக் கழுவாய் செய்யும் அவ்வியல்பினையும் கூறுவேம். |