| (வி - ம்.) இறைவனுலகில் அவனுருவெடுத்தல் என்றது சாரூபம் என்னும் பதமுத்தியை. கோணை - அழிவின்மை. மலக்குறும்புக் கோணை என மாற்றிக் கொடுமையை எனினுமாம். கொடுமையை அனுக்கும் என்க. (389) வேறு | | வினையிரண்டா மகாமமொடு காமமென வகாமம் | | | விமலனுரை துணியாத தைவிகம்பே ரார்வம் | | | துனையவறி வழிமோகம் பொச்சாப்புக் கள்வர் | | | துளக்கரையர் பயமுதலா னிழுக்குறுதல் காமம் | | | இனைதலவ ணறிகின்றா மென்றவையொன் றின்றி | | | யியற்றுதலாங் கழுவாயிங் ககாமவினைக் கதற்கு | | | நனிவெருவி னிருகுணிதம் புரிதன்மனை யோரி | | | னாற்றிநயிட் டிகனிரட்டி பவுதிகன்மற் றையர்க்கில். |
(இ - ள்.) தீவினை அகாமம், காமம் என இருவகைப்படும். இவற்றுள் அகாமமாவது, இறைவனூலை யுணர்ந்திருந்தும் அறிவினைப் பேதைப்படுக்கும் ஊழ்வினையும், பேராசை வருத்துதலானே அறிவழிதற்குக் காரணமான மோகமும், பொச்சாப்பும், கள்வரானுண்டாகும் அச்சமும், நடுங்கச்செய்யும் அரசனால் உண்டாகும் அச்சமும், இன்னோரன்ன காரணங்களானே செய்யப்படும் தீவினைகளாம். தீவினை செய்வதனால் வருந்துதலும், நிரயத்தே (துன்பத்தை) உணர்வேம் என்பன போன்ற வுணர்ச்சிகள் இன்றி, விரும்பி நெஞ்சாரச் செய்யும் தீவினைகள் காமம் எனப்படும். ஈண்டு அகாமமாகிய தீவினைக்கே கழுவாய் கூறப்படும். காமத்தீவினைகளுக்கு மிகவும் அஞ்சுமிடத்தே அகாமத்திற்குக் கூறிய கழுவாயை இருமடங்காகச் செய்க. இல்வாழ்வானுக்கே இங்குக் கழுவாய் கூறப்படுதலான், பவுதிகப் பிரமசாரி இல்வாழ்வானுக்குக் கூறிய கழுவாயை இருமடங்காகவும், நயிட்டிகப் பிரமசாரி நான்குமடங்காகவும் இயற்றுக. ஏனைய வானப்பிரத்தனுக்கும் சந்நியாசிக்கும் வழுவா யில்லை என்க. (வி - ம்.) அகாமம் - தான் விரும்பாமலே காரணங்களால் செய்யப்பட்ட தீவினைகள் என்றும், காமம் - தானே விரும்பிச் செய்வன என்றுமறிக. மற்றையர் என்றது வானப்பிரத்த சந்நியாசிகளை. இவர்கள் எவ்வாற்றானும் தீவினை செய்தல் தகாது என்பது கருத்து. குணிதம் - மடங்கு. இல்லறத்தான் அகாமவினைக்குரிய கழுவாயின் இருமடங்கு காமவினைக்கும் பவுதிகன் அவனின் இருமடங்கு அகாமத்திற்கும் அதின் இருமடங்கு காமத்திற்கும் செய்தல் வேண்டும் என்றிப்படிக் கொள்க. (390) | | பொருவிலியைப் பிராமமுகுர்த் தத்தெணா னிரட்டி | | | பூணலிரு நூறுமூ லம்புகற னீறு | | | தரியாது புறம்போந்தான் பசித்தன்றா னைந்துந் | | | தான்பருகிக் கோரமிரு நூறுபசுப் பார்ப்பார் |
|