| | பரிதிமுத லிரண்டியக்கந் தனிற்பார்க்கி னூறு | | | பரன்முன்றின் முதனிலத்திற் கழிப்புறின்மா திரங்கள் | | | ஒருவினூ றறைதல்பிர மம்பசித்து நன்காட் | | | டுயர்புரிக்க ணேலைஞ்ஞூ றீசான முரைத்தல். |
(இ - ள்.) வைகறைப் பொழுதிலே எழுந்து ஒப்பற்ற இறைவனைத் தியானம் செய்யத் தவறியவன் இருமடங்கு தியானம் பூண்க. செய்யத் தவறின மூலமந்திரத்தை இருநூறு முறை கணித்திடுக. திருநீறு தரியாது புறத்தே போந்தவன் அன்று உண்ணாதிருந்து ஆனைந்து முண்டு அகோரமந்திரம் இருநூறுமுறை கணித்திடுக. மலம்நீர் கழிக்கும்பொழுது பசு பார்ப்பனர் ஞாயிறு முதலியோரைப் பார்த்தவன் நூறுமுறை அகோர மந்திரத்தைக் கணித்திடுக. இறைவன் திருக்கோயில் முன்றின் முதலிய மாண்புடைய இடங்களிலே மலமூத்திரம் விட்டாலும் திசைகள் தவறி மலமூத்திரம் விடினும் உண்ணாதிருந்து பஞ்சப்பிரம மந்திரங்களை நூறுமுறை கணித்திடுக. சுடுகாட்டிலாதல் திருக்கோயில் வீதிகளினாதல் மலமூத்திரம் விட்டவன் ஐந்நூறுமுறை ஈசானமந்திரங் கணித்திடுக. (வி - ம்.) பொருவிலி - ஒப்பற்ற இறைவன். எணான் - எண்ணான். பூணல் - வியங்கோள். மூலம் - மூலமந்திரம். ஆனைந்து - பஞ்ச கௌவியம். பரன் - இறைவன். நிலம் - சிறந்தநிலம். மாதிரம் - மலமூத்திரம் விடற்கு நூல்கூறிய திசைகள். புரி - நகரம். (391) | | இரண்டியக்க முதலான வழுக்காடை யெய்தி | | | னெரியுறுநீர் கோசலமண் ணேய்த்தொலித்திட் டுணக்கல் | | | திரண்டபதி னொருமனுவு முக்கானோ யாளி | | | செப்பலழ னீராடி னோயிலியு மாடின | | | அரண்டகுமம் மனுநூறுஞ் சாதமிரு நூறு | | | மறைதனூற் றெட்டுணவின் றகோரமுடை யின்றி | | | வரண்டுதிரைப் புனலாடிற் பதிதரைப்பார்த் திடினும் | | | வழங்குகநூற் றெட்டூற்றத் தறல்படிந்தும் வழங்கல். |
(இ - ள்.) மலமூத்திர முதலிய அழுக்குகள் படிந்த ஆடை யுடையனாயின் அவ்வழுக்காடையை வெந்நீரில் ஆனீரும் புற்றுமண்ணுங் கூட்டி நனைத்து ஒலித்து வெயிலிலுலர்த்துக. நூல்கள் கூடாதெனக்கூறி விலக்கிய வெந்நீரில் நோயாளன் ஆடினால் பஞ்சப்பிரம சடங்கமொன்று கூடிய பதினொரு மந்திரங்களையும் மும்முறை கணிக்க. நோயில்லாதவன் வெந்நீராடின் பாதுகாப்புத் தரும் அப்பதினொரு மந்திரங்களையும் நூறுமுறையும், சத்தியோசாத மந்திரத்தை இருநூறு முறையுங் கணித்திடுக. ஆடையின்றி வரன்றிவரும் அலைகளையுடைய நீரிற் குளித்தவன் உண்ணாதிருந்து நூற்றெட்டுமுறை அகோரமந்திரத்தைக் கணித்திடுக. தீவினைமாக்களைக் காணநேரின் ஊக்கத்தோடு நீராடி அம்மந்திரத்தை நூற்றெட்டு முறை கணித்திடுக. |