| (வி - ம்.) எரியுறுநீர் - வெந்நீர். மண் - புற்றுமண். ஏய்த்து - இயைத்து. உணக்கல் - வியங்கோள். பதினொருமனு - பஞ்சசடங்கங்கள். அரண் - பாதுகாவல். அழனீர் - வெந்நீர். வரண்டுதல் - வரன்றுதல். பதிதர் - தீவினையாளர். அறல் - நீர். வழங்குக : வழங்குங்கால் அறல் படிந்தும் வழங்குக என்க. (392) | | ஒருவரொரு தெருவினிறின் முகடொன்றில்வழுக்குண் | | | டோரைம்ப திடையறின்விற் கிடைமுப்ப திடையே | | | தெருவிலங்கி னப்பாலின் றொருபதிற்றொன் றேனைத் | | | தெருக்களுக்கு முப்பதுதண் டாலயத்துக் குண்டால் | | | அருமறையா திகடொடங்க லுடலெடுக்கு முன்ன | | | ரந்தணர்முன் னால்வர்க்கும் பிறப்பிறப்பின் வழுநான் | | | ஒருபதுபன் னிரண்டுபதி னாறுபதி னைந்தா | | | மொழுக்கமிலாச் சூத்திரர்க்கு முப்பதிற்று நாளே. |
(இ - ள்.) ஒருவர் ஒரு தெருவின்கண் இறந்துவிட்டால் இறந்த வீட்டின் முகடு பொருந்தியிருந்தால் ஐம்பது தண்டுதொலை வழக்குண்டாகும். முகடொன்றா திடையற்றிருப்பின் முப்பதுதண்டு தொலை வழுக்காம். பக்கத்துத் தெருவாயின் வழுக்கில்லை. திருக்கோயிலுக்குப் பக்கத்துத் தெருவாயின் முப்பதுதண்டு தொலை வழுக்காம். வழுக்குண்டாயின் பிணமெடுக்குமுன் வேதமோதுதல் முதலிய தொடங்கற்க. இனி, பார்ப்பனர்க்கு இறந்துழியும் பிறந்துழியும் பத்துநாள் வழுக்காம். அரசர்க்குப் பன்னிரண்டுநாள், வணிகர்க்குப் பதினாறுநாள், ஆகமவொழுக்கமுடைய வேளாளர்க்குப் பதினைந்துநாள், ஆகமவொழுக்கமில்லாத வேளாளர்க்கு முப்பதுநாள் வழுக்குண்டாம். (வி - ம்.) வழுக்கு - வாலாமை; தீட்டு. தண்டு - ஓரளவு, நான்குமுழம். முகடு - வீட்டின்முகடு. தொடங்கல் - வியங்கோள். (393) | | புதல்வியுடன் பிறந்தாடா யுடன்பிறந்தான் முதலோர் | | | பொன்றின்முந்நா ளொழிந்தோர்க்குப் புனலாட லிறைவன் | | | பதம்விரவு ஞானியர்க்கின் றுலகதரு மணியிற் | | | பரவுசிவ தருமணியிற் பயின்றவர்க்கு முந்நாள் | | | அதளுடையார்க் குரியகணி கையர்தமக்குப் பதினைந் | | | தாகுமருச் சனையாதி பிறர்தம்மான் முடித்தல் | | | மதியமையா தெனிலீர வுடைதரித்துப் புரிதன் | | | மகவிழந்தார் பசித்தன்றா னைந்துண்டல் வருநாள். |
(இ - ள்.) தன் புதல்வி, தன்னுடன் பிறந்தாள், தாய், தாயுடன் பிறந்த மாமன் முதலியவர் இறந்துழியும், மூன்றுநாள் வழுக்காம். மற்றையோர் இறந்துழி நீராடுந்துணையும் வழுக்காம். இறைவன் திருவடியிற் கலக்குந் தகுதியுடைய ஞானியர் மறைந்துழி வழுக்கில்லை. |