| உலகதருமணியும் வழிபடற்குரிய சிவதருமணியும் ஆகிய இருவகைத் தீக்கைகளுள் ஒன்றுபெற்று அவ்வழி ஒழுகினவர் இறந்துழி மூன்றுநாள் வழுக்காம். தோலுடையுடைய இறைவனுக்குரிய உருத்திரகணிகையர் இறந்துழிப் பதினைந்துநாள் வழுக்குண்டு. இனி வழுக்குண்டாய காலத்தே இறைவழிபாடு முதலியவற்றைப் பிறரைக்கொண்டு செய்வித்தல் வேண்டும். அங்ஙனம் செய்வித்தற்கு நெஞ்சொருப்படாத விடத்தே ஈர ஆடையுடனே வழிபாடு முதலியன செய்க. மகவிறக்கப்பட்டோர் அன்று உண்ணாதிருந்து மறுநாள் ஆனைந்துண்க. (வி - ம்.) பொன்றின் - இறந்தால். ஒழிந்தோர் - இவரல்லா உறவினர். புனலாடல் - புனலாடுக. உலகதருமணி - சபீசதீக்கையிலொன்று; இல்லறத்தானுக்குச் செய்வது. சிவதருமணி - சபீசதீக்கையிலொன்று; நைட்டிகருக்குச் செய்வது. அதளுடையான் - சிவன். (394) | | கணவனிறிற் றலைமழித்துச் சாந்திரா யணமுன் | | | கடுவிரத முஞற்றியபின் னுடலியங்கச் சிறிதூண் | | | உணன்மகளி ரறிவுண்டேற் குருவருளான் முக்க | | | ணொருவனடிப் பூசைமுறை யுஞற்றியிடன் மரபாம் | | | மணமகன்றன் பணியன்றி யிறையடிப்பூ சனையும் | | | வாஞ்சிப்பி னவனருள்பெற் றியற்றன்மதி தொறும்பூப் | | | பணவியமுந் நாளுமருச் சனைபிறரா லாற்றி | | | யறலாடிக் கவ்வியமுண் டருச்சித்தல் வழிநாள். |
(இ - ள்.) மகளிர் தங்கணவன் இறந்துழித் தலையை மழித்துக் கொண்டு சாந்திராயண முதலிய கடிய விரதங்களைச் செய்து முடித்த பின்னர் உடலியங்குதற் பொருட்டுச் சிறிதுணவு உட்கொண்டிருப்பாராக. மெய்யறிவுபெறும் விருப்பமும், தகுதியுமுண்டாயின் நல்லாசிரியன் அருள்பெற்று முக்கட்பெருமான் திருவடியை நூன்முறை பிறழாது வழிபட்டு வருதல் சிறந்த முறையாகும். இனி, இல்லறத்துள்ள மகளிர் தம் கணவரையே தெய்வமாகக் கருதி அவன் பணிகளை இயற்றுதலோடு இறைவன் வழிபாட்டினையும் விரும்புவதுண்டேல் கணவன் உடன்பாடுபெற்று இயற்றுக. திங்கள்தொறும் பூப்புநேர்ந்த மூன்று நாளும் பிறரால் வழிபாடியற்றுவிக்க வேண்டும். நான்காநாள் நீராடி ஆனைந்துண்டபின் தாமே வழிபாடுசெய்க. (வி - ம்.) சாந்திராயணம் - ஒருவிரதம். அறிவு - மெய்யறிவு. வாஞ்சித்தல் - விரும்புதல். அறல் - நீர். (395) | | வைகறையா மத்திருது நிகழினுமந் நாட்கு | | | வருமைந்தா நாண்மறையோ ரேனையர்நான் காதி | | | நைகரமில் கிழத்திமுலை புணர்தல்விர தத்தோ | | | னான்மறையோ னெனிலைந்தா நாளினுங்கூ டாது | | | பொய்கழியா குதிபுரிதன் மூன்றாறெட் டிராறு | | | புணர்பதினான் கிரண்டுவா மதியாதி வரினும் |
|