| | கைகலவல் யாவர்களும் விலக்காநா ளாகிற் | | | கலவானேற் கருவொன்று சிதைத்தகரி சுறுவான். |
(இ - ள்.) மகளிர்க்கு வைகறைப்பொழுதிலே பூப்பு நிகழுமாயினும் அந்த நாளையே முதனாளாகக்கொண்டு மேல் வருகின்ற ஐந்தாநாள் முதலாகப் பார்ப்பனரும் ஏனையோர் நான்காநாள் முதலாகவும் துன்பமில்லாத மனைவியைக் கூடுக. பார்ப்பனன் விரதமுடையனாயின் ஐந்தாநாளினும் கூடாதிருந்தே பொய் நீங்குதற்குக் காரணமான ஆகுதியையுஞ் செய்க. இனி எவ்வகுப்பினரும் மூன்றும், ஆறும், எட்டும், பன்னிரண்டும், பொருந்திய பதினான்கும், அமாவாசியும் பூரணையுமாகிய திதிகளிலேயும் இன்னோரன்ன நாள்களிலேயும் கூடாதொழிக. விலக்கப்படாமல் விதித்த நாள்களிலே ஒருவன் தன் மனைவியைப் புணரானாயின் அவன் கருவொன்றனைச் சிதைத்த தீவினையை எய்தா நிற்பன். (வி - ம்.) இருது - பூப்பு. நைககரம் - துன்பம். பொய் - மலம். இரண்டுவா - அமாவாசியும் பூரணையும், கைகலவல் - எதிர்மறை வியங்கோள். (396) | | பிரணவமோ ரயுதம்விலக் கியநாளிற் புணரிற் | | | பிரணவமில் லார்மூலம் புகறல்பகற் புணர்ச்சி | | | விரவினுமற் றாம்பகலி னுறங்கலரி வையர்தம் | | | வீழ்புணர்ச்சி கேட்டல்பசுப் புணர்ச்சிமுத னோக்கல் | | | பரவிவற்றி னகோரநூற் றெட்டாகும் பிறனில் | | | பரத்தையர்தோள் விடலியர்தோள் வீழ்ந்துபரி சித்தான் | | | கரிசறநூற் றைம்பதினா யிரமவற்றி னிரட்டி | | | கன்னிகைமென் முலைத்தடத்துக் கலந்துவிடிற் கணித்தல். |
(இ - ள்.) அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வகுப்பினரும் மகளிரைக் கூடற்கு விலக்கிய நாளிலே ஒரோவழிக் கூடநேரின் அத்தீவினை தீரப் பிரணவமந்திரத்தைப் பதினாயிரமுறை கணிக்க. பிரணவமோதும் உரிமையில்லாத வேளாளர் அத்தனைமுறை திருவைந்தெழுத்தைக் கணிக்க, பகற்காலத்தே புணர்தற்கும் இவ்விதியே யாம். இனிப் பகற்பொழுதிலே உறங்குதலும் மகளிருடைய விரும்பிய புணர்ச்சியைக் கேட்கினும், ஆன் புணர்ச்சி முதலியவற்றை நோக்கினும், விரிந்த இன்னோரன்ன தீவினைகட்கு அகோரமந்திரத்தை நூற்றெட்டுமுறை கணித்தல் கழுவாயாம். இனி, பிறன்மனைவி, வரைவின் மகளிர், தூர்த்தமகளிர் என்னும் இவரை விரும்பித் தொட்டவன் இத்தீவினைதீர அகோரமந்திரத்தை நூற்றைம்பதினாயிரம் முறை கணித்திடுக. கன்னிகையைக் கூடினவன் முந்நூறாயிரம் முறை அம்மந்திரத்தைக் கணித்தல் வேண்டும். (வி - ம்.) அயுதம் - பதினாயிரம். பிரணவமில்லார் - வேளாளர். விடலியர் - தூர்த்தமகளிர். கன்னிகை - மணமாகாதவள். (397) |