| | இணங்கவின மல்லாரை யிச்சையிற்பார்த் தானூ | | | றெழிற்குரவன் மனைவியைப்பார்த் தான்சாத நூறு | | | வணங்கிடையைக் கனவின்முயக் குறின்விரதி முழுகி | | | மாற்றியுண வொருநூறத் திரநினைந்து கனவின் | | | அணங்கறநா னூறிரவி னினைந்துவெண்ணீ ரிறக்கி | | | னைம்பதிற்று நாற்றிவா மந்தாழ்ந்தோர்ப் புணரின் | | | உணங்கவினை யயுதம்விழை வுறினூலான் விரத | | | மொழிந்துவரைந் தணைதலிலாற் கொழிவிலள றொழிவில். |
(இ - ள்.) புணர்தற்பொருட்டு ஏதின் மகளிரை அவாவுடன் நோக்கினவன் அகோரமந்திரத்தை நூறுமுறை கணித்திடுக. ஆசிரியனுடைய மனைவி அழகினைக் காமத்தானோக்கியவன் சத்தியோசாத மந்திரம் நூறுமுறை கணித்திடுக. பிரமசாரி மகளிரைக் கனவின்கட் கூடியதாகக் கண்டவிடத்தே நீராடி உண்ணாதிருந்து அத்திரமந்திரத்தை நூறுமுறை கணித்து அக்கனவாலுண்டான தீவினையைக் கழுவுக. இரவின்கண் மகளிரை நினைதல் வாயிலாய்ச் சுக்கிலம் விட்டவன் இருநூறுமுறை வாமதேவ மந்திரம் கணித்திடுக. சாதியிற்றாழ்ந்த மகளிரைப் புணரின் அத்தீவினைகெட, அம்மந்திரத்தைப் பதினாயிர முறை கணித்திடுக. பிரமசாரி மகளிர்போகத்தை விரும்புமிடத்தே நூல்கள் கூறியமுறைப்படி அவ்விரதத்தை விட்டுவிட்டுத் திருமணஞ் செய்து கொள்வானாக. இவ்வாறு செய்யாமல் மகளிரைப் புணரும் பிரமசாரிக்கு அண்ணாத்தல் செய்யாத நிரயமுண்டாம். அத்தீவினைக்குக் கழுவாயுமில்லை. (வி - ம்.) இனமல்லாரை இணங்க இச்சையிற் பார்த்தான் என மாறுக. குரவன் எழில்மனைவியை என்க. வணங்கிடை : அன்மொழித் தொகை. அளறு - நிரயம். ஒழிவில் - கழுவாயில்லை. (398) | | வீழ்ந்துபவு திகன்பிறனில் பரிசிக்கிற் பசித்து | | | விளம்பல்பிர ணவமிலக்கம் புணரிலொழி வில்லை | | | தாழ்ந்தபுலை மனைபுகின்மண் கலமோப்பித் தூய்மை | | | சமைத்தையா யிரம்புருடஞ் சாற்றல்கிருச் சிரத்தோ | | | டாழ்ந்தவள்கை யூணொருநா ளுணிற்கோர மயுத | | | மறைந்தமலற் கைந்தாட்டித் தத்தகிருச் சிரத்தின் | | | வாழ்ந்திடுக வறிந்தேலைங் கிருச்சிரத்தி னயுதம் | | | வாமமிரு நாண்முந்நாட் கேற்றுகமே லொழிவில். |
(இ - ள்.) பவுதிகப் பிரமசாரி பிறன்மனைவியை விரும்பித் தொட்ட தீவினைக்குப் பிரணவமந்திரத்தை நூறாயிரமுறை கணித்திடுக. புணர்ந்துவிட்டால் கழுவாயில்லை. தாழ்ந்த புலைச்சி இல்லத்தே புகுந்து விட்டால் மண்கலங்களை அகற்றிவிட்டு ஆப்பிமெழுகித் தூய்மை செய்து தற்புருடமந்திரத்தை ஐயாயிரமுறை கணித்திடுக. அப்புலைச்சி கையில் ஒருநாள் அறிவிற்றாழ்ந்து ஊண் உண்டுவிடின் கிருச்சிர விரதத் |