| தோடு அகோரமந்திரத்தைப் பதினாயிரமுறை கணித்து இறைவனுக்கு ஆனைந்தாட்டி உய்ந்திடுக. அறிந்தும் உண்டானாயின் தத்தகிருச்சிர விரதமியற்றி உய்ந்திடுக. இருநாள் உண்ணின் பஞ்சகிருச்சிர விரதத்தோடு வாமதேவமந்திரம் பதினாயிரமுறை கணித்திடுக. மூன்றுநாளாயின் பின்னும் ஒருமடங்கு ஏற்றுக. அதற்கு மேற்படின் கழுவாயில்லை. (வி - ம்.) பவுதிகன் - பிரமசாரியில் ஒருவகை. பசித்து - உண்ணாதிருந்து. புலை - புலைச்சி. ஓம்பி - அகற்றி. புருடம் - தற்புருடமந்திரம். கிருச்சிரம் - ஒரு கழுவாய் விரதம். அது பலவகைப்படும். (399) | | இழிகுலவண் ணாத்திமுத லோர்புகினுஞ் சுத்தி | | | யியற்றிமுந்நா ளயுதவையா யிரமியம்ப லவர்கைத் | | | தழுமுணவோர் கானுகரிற் பதினையா யிரநா | | | டாமூன்று புகன்றானைந் துண்டனா ளிரண்டேல் | | | விழைவினிரு குணிதமறிந் தேலொருநாட் கிரட்டி | | | மிசைந்ததுபன் னாளாகிற் சாந்திரா யணத்தைக் | | | கெழுமன்மற்றை நவையுணவிற் கிளைப்பினுமெந் தைக்குக் | | | கெவ்வியங்கொண் டாட்டிநிசி யுண்ணின்வினை கெடுமே. |
(இ - ள்.) இனி இழிகுலத்தோராகிய வண்ணாத்தி முதலியோர் இல்லத்தே புகுந்தக்கால் முற்கூறியவாறே இல்லத்தைத் தூய்தாக்கி மூன்றுநாள் பதினையாயிரமுறை வாமதேவ மந்திரத்தை ஓதுக. அவர் கையாற் றொடப்பட்ட உணவினை ஒருமுறை உண்ணின் அங்ஙனமே பதினையாயிரமுறை அம்மந்திரத்தை ஓதி ஆனைந்துண்ணுக. இரண்டு நாள் உண்ணின் விரும்பி அம்மந்திரத்தை இருமடங்கு ஓதுக. அறிந்துண்ணின் ஒருநாளுக்கு இருமடங்கோதுக. பன்னாள் உண்டிருப்பின் சாந்திராயண நோன்புமியற்றுக. ஏனைய தீயவுணவுண்டதற்கு வருந்தினும் எம்பெருமானுக்கு ஆனைந்தூட்டிப் பகல் உண்ணாது இரவின் உண்ணின் அத்தீவினை கெடும். (வி - ம்.) அயுதவையாயிரம் - பதினையாயிரம். குணிதம் - மடங்கு. கெழுமல் - பொருந்துக. நவை - தீமை. (400) | | வைகறொறு மொருவலக்கை நீர்மிகமுன் பக்கம் | | | வாய்மடுத்துப் பின்பக்க மம்முறையிற் கழித்தல் | | | பொய்கழுவு சாந்திரா யணம்பதநீர் யாதும் | | | பன்னிருநாள் போக்கினது பராகம் | | | மெய்கலவும் பிரசாபத் தியம்பகன்மூன் றிடையே | | | விரவுமொவ்வொர் நாள்விடுத்துண் டிரவுமவ்வா றுண்டல் | | | பெய்கனனீர் பானெய்பகன் மும்மூன்றுண் டியாதும் | | | பேணாமை முப்பகறான் றத்தகிருச் சிரமே. |
|