பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்579

(இ - ள்.) வளர்பிறைப் பக்கத்துப் பதினைந்து நாள்களினும் முதனாள் தொடங்கி நாடோறும் வலக்கையான் ஒவ்வொரு கை நீர் மிகும்படி ஏற்றி உண்டு தேய்பிறைப் பக்கத்தே நாடோறும் ஒவ்வொரு கைநீர் குறைய உண்ணலே மாசுகழுவுதற்குரிய சாந்திராயண நோன்பாகும், சோறு நீர் முதலிய எவ்வகை யுணவுமின்றிப் பன்னிரண்டுநாள் பட்டினி விட்டிருப்பது பராக நோன்பாகும். இனி மெய்ப்பொருளைக் கலத்தற்குக் காரணமான பிரசாபத்திய நோன்பென்பது மூன்றுநாட் பகலுணவினையும் இடையேவரும் ஒரு முழுநாளுணவினையும் விடுத்து இவ்வாறு இரவினும் உண்ணலாம். இனி தத்தகிருச்சிரம் என்பது வெந்நீர் மட்டும் ஒருநாள் ஒருமுறை உண்டும் மறுநாள் காய்ச்சியபாலை மட்டும் உண்டும் மறுநாள் உருக்கிய நெய்யைமட்டும் உண்டும் அடுத்து வரும் மூன்றுநாள் உண்ணாதிருந்தும் இங்ஙனமே பன்னிரண்டுநாள் நோற்பதாம்.

(வி - ம்.) வைகல் - நாள். முன்பக்கம் - வளர்பிறைப் பகுதி நாள். பொய் - மலம். பதம் - சோறு. கலவும் - கலக்கும். பெய்கனல் என்பதனை பாலுக்கும் நெய்யிற்கும் கூட்டுக.

(401)

 முக்கனிபா லுண்டன்மூ வைந்தாறு வைகன்
           மொழிபவதி தபனமென முக்கணனார் விழவில்
 தொக்குநெடு வீதியிடை யிழிஞருறத் தொடினுந்
           துன்னாது கரிசிறைவற் றொழப்போகுங் காலும்
 மிக்கமகத் தினும்வரைவி னுந்தொடினீ றணிதல்
           வெய்யவதி பாதகத்தோ ரன்னமொரு திங்கள்
 பொக்கமிகு மாபாத கத்தவர்க ளன்னம்
           புணர்திங்க ளேனையரூ ணாண்டுணிற்பா தகரே.

(இ - ள்.) வாழை பலா மா என்னும் மூன்றின் கனிகளோடு பாலுமாகிய உணவினைமட்டும் இருபத்தொருநாள் உண்டு நோன்பிருத்தல் பவதிதவன நோன்பென்று கூறுக. இறைவன் விழாக்காலத்தே நெடிய திருவீதியின்கண் இழிகுலத்தோர் கூடி நன்கு தொட்டாலும் தீவினையில்லை. இறைவனை வழிபடப்போகும் பொழுதும் வேள்வி முதலியன செய்யுங்காலத்தும் திருமணக்காலத்தும் இழிஞர் தொடின் திருநீறணியுமாத்திரையே கழுவாயாம். இனி கொடிய மிகைத்தீவினையோர் சோற்றினை ஒருதிங்களுண்டோரும், பொய்மிகுந்த பெருந்தீவினையோர் சோற்றினை இரண்டு திங்களுண்டோரும், தீவினையோர் சோற்றினை ஓராண்டு உண்டோரும் அவ்வத்தீவினையாளராகி விடுவர்.

(வி - ம்.) முக்கனி - வாழைக்கனி, பலாக்கனி, மாங்கனி என்பன. மூவைந்தாறுவைகல் - இருபத்தொருநாள். இழிஞர்தொக்கென்க. கரிசு - தீவினை. மகம் - வேள்வி, மாமகமுமாம்.

(402)

 இழிக்கினரூ ணிழிகுலத்தா ரூணாதி யழுக்கி
           னேய்க்குமுளத் தினையதனா லிழிவினையே புரிவர்
 வழுக்கிலரூ ணுளந்தூய்மை யாக்கியிடு மதனால்
           வாய்மைவினை யேபுரிவ ராதலினா லிழியூண்