| | கழிக்கவரை வினினூறு நாலாநா டன்னிற் | | | காமருசீ மந்தத்தி னாமகர ணத்தில் | | | செழிக்கவூ ணூட்டுநாள் சபிண்டியிலா யிரமாற் | | | சிரார்த்தத்தி லயுதமப்பா லுண்ணிலொரு நூறே. |
(இ - ள்.) நன்னெறியினின்றும் வழுவினோர் அளிக்கும் உணவும் இழிகுலத்தோர் தரும் உணவும் இன்னோரன்ன பிறவுணவும் உண்போர் நெஞ்சினை மாசுபடுத்திவிடும். இக்காரணத்தால் அவ்வுணவினை உண்டோரும் தீவினையே புரியும் தன்மையுடையராவர். இனி மாசில்லாதவருடைய உணவு உள்ளத்தைத் தூய்தாக்கும். எனவே அவ்வுணவுண்டோர் மெய்யாய நல்வினையே நயந்து செய்வார். இங்ஙனமாதலின் நல்லோர் இழிதகையுணவினைக் கடைப்பிடியாக உண்ணாதொழிக. இனி, ஏதிலார் உணவினை அவர் இல்லத்துநிகழும் திருமணத்தில் உண்ணநேரின் அகோரமந்திரத்தை நூறுமுறையும், நாலாநீர்ச் சடங்கினும் விரும்புதற்குக் காரணமான சீமந்தச் சடங்கினும் பெயர்சூட்டுச் சடங்கினும் சோறூட்டுச் சடங்கினும் சபிண்டிச் சடங்கினும் உண்ண நேரின் அம்மந்திரத்தைத் தனித்தனி ஆயிரமுறையும் சிரார்த்தநாளில் உண்ணின் பதினாயிரமுறையும் அப்பானிகழும் திவசங்களில் உண்ணின் நூறுமுறையும் கணித்திடுக. (வி - ம்.) இழிந்தோர் உணவினை உண்ணலாகாமைக்குக் காரணம் கூறியவாறு. வரைவு - திருமணவிழா. நாமகரணம் - பெயர்சூட்டு விழவு. சபிண்டி - இறந்தோர் திறத்தே செய்யுமொரு கருமம். (403) | | இயக்கமிரண் டிழிந்தவெண்ணீ ருண்டவன்கீழ்ச் சாதி | | | யில்லகத்தி னுண்டவன்புன் புலைச்சியிணைத் தோளை | | | முயக்கமுற வெண்ணினவ னிவரயுத மியம்பி | | | முக்கணற்கா னைந்தாட்டித் தாங்களுமுண் ணுகர்தல் | | | வயக்கியபொற் கலமாதி மரப்பலகை யந்தம் | | | வன்னிநீ ராற்புனிதம் வழுக்குறிற்கோ சலமண் | | | நயக்குமற லாற்புனிதங் களிற்றுலவை சங்க | | | நன்றுகடைந் ததற்பினா டொறுமயநீர்க் கழுவல். |
(இ - ள்.) பித்து முதலிய காரணங்களானே மலம் நீர் சுக்கிலம் இவற்றை உண்டவனும், கீழ்ச்சாதியோர் இல்லத்தே உண்டவனும், புல்லிய புலைச்சியைக் கூடநினைத்தவனும் என்னும் இவரெல்லாம் அகோர மந்திரத்தைப் பதினாயிரமுறை கணித்துப் பின்னர் இறைவனுக்கு ஆனைந்தாட்டித் தாங்களும் பருகியுய்தி பெறுக. விளக்கமுடைய பொன் முதலியவற்றால் இயன்ற கலங்கள் முதலாக மரப்பலகை ஈறாகவுள்ள கருவிப் பண்டங்கள் வெந்நீராற் கழுவத் தூய்மைபெறும். இவற்றில் வழுக்குண்டாய விடத்து ஆநீரும் புற்றுமண்ணுங்கொண்டு விரும்புகின்ற நன்னீரிற் கழுவத் தூயவாம் யானைத்தந்தம் சங்கு முதலியன நன்கு கடைந்ததற்பின் தூயவாம். பின்னர் இவற்றை நாடோறும் சாணகத்தானும் ஆநீரானும் கழுவுக. |