| (வி - ம்.) பித்துடைமையால் மலம் நீர் முதலியன உண்டவன் என்க. வன்னிநீர் - வெந்நீர். உலவை - கொம்பு; ஈண்டுத்தந்தம். நன்று- பெரிதும். (404) | | வளைகரிக்கோ டிழுக்குறின்வெந் நீர்மண்ணாற் செம்பு | | | வண்புளியாற் கஞ்சமுதல் சாம்பரா னிவைதோம் | | | அளைவுறினெய் பூசியெரி யழுத்துதலாற் புனித | | | மாங்கவுசி கங்கடுகாற் சாமரைதா னரிட்டம் | | | திளைபுனலாற் றோலாதி தடந்திரைநீர் தன்னாற் | | | றிகழுமத னிழுக்குறிற்கோ சலமண்ணீ ரகற்றும் | | | விளைகலத்துச் சொன்றிநாய் பன்றிகரங் காகம் | | | வெய்யவாய்ப் பூஞைவா யிடிற்கலத்தோ டகற்றல். |
(இ - ள்.) வளைந்த யானைத்தந்தம் மாசுற்றவிடத்தே வெந்நீரானும், புற்றுமண்ணாலும் செம்பு மாசுறின் வளவிய புளியானும், வெண்கல முதலியன சாம்பரானும் தூய்மையுறும். இவை வாலாமையுடையன. ஆயின் நெய்பூசி நெருப்பினுள் இடுதலானே தூயவாம். பட்டு, கடுகரைத்துக் கலந்த நீரானும், சாமரை மோர்கலந்த நீரானும், புலித்தோன் முதலியன அலை வீசும் பெரிய நீர்நிலைகளானும் தூய்மையுறும். இவை வழுக்குப்படின் ஆநீர் புற்றுமண் முதலியன தூய்மைப்படுத்தும். சமைக்கும் கலத்தில் உள்ள சோற்றின்கண் நாய் பன்றி கழுதை காகம் வெவ்விய வாயையுடைய பூனை முதலியன வாயிட்டுவிடின் அக்கலத்தோடு அச்சோற்றை அகற்றி விடுக. (வி - ம்.) கஞ்சம் - வெண்கலம். தோம் - குற்றம். கவுசிகம் - கடுகு; வெண்கடுகு. அரிட்டம் - மோர். சொன்றி - சோறு. கரம் - கழுதை. பூஞை - பூனை. அகற்றல் - வியங்கோள். (405) | | குவித்தபதத் தொருபாங்கர் வௌவினங்க ணகற்றிக் | | | கொழும்பூதி தூய்க்கவ்வி யந்தெளித்த லுணுங்கால் | | | நவைத்தமயிர் கொசுகாதி படினுமங்க ணகற்றி | | | நன்னீறு தூவறேன் வடித்தழலிற் காய்த்தல் | | | அவித்தநீர் பெய்துப்புச் செருத்தல்கழீஇக் கறந்திட் | | | டாவின்பால் வெண்ணெயழ லழற்றல்புன றயிலம் | | | சவித்தகருப் புரம்புழுகு சாந்துபல விரையுந் | | | தக்கநிவே தனம்பிறவு மருக்கியநீர் தெளித்தல். |
(இ - ள்.) சமைத்துப் பாவாடைமேற் குவிக்கப்பட்ட பெரிய சோற்றுக் குவியலில் ஒருபக்கத்தே முற்கூறப்பட்ட நாய் முதலியன வாய் வைப்பின் அவ்விடத்துள்ள சோற்றைமட்டும் அகற்றிவிட்டுக் கொழுவிய திருநீற்றைத் தூவி ஆனைந்தும் தெளிக்கத் தூய்மையாம். உண்ணும்பொழுது உணவின்கண் தீயமயிர் கொசு முதலியன வீழினும் அப்பகுதியை அகற்றி நல்ல திருநீற்றைத் தூவித் தூய்மை செய்க. |