| தேனை வடித்து நெருப்பிலிட்டுக் காய்ச்சத் தூயதாம். உப்பினை நீர் விட்டுச் காய்ச்சத் தூய்தாம். ஆவின்முலையினைக் கழுவிக் கறத்தலானே பால் தூய்தாம். வெண்ணெயை அழலில் உருக்கத் தூயதாம். திருமஞ்சன நீரும் எண்ணெயும் ஒளியுடைய கருப்பூரம் புழுகு சந்தன முதலிய பல நறுமணப் பொருள்களும் தகுதியுடைய நிவேதனப் பொருள்களும் வழிபாட்டு நீர் தெளித்த மாத்திரையானே தூயவாம். (வி - ம்.) பாவாடையின்மேற் குவித்த என்க. நாய் முதலியன வௌவின் என்க. நவைத்த - தீமையுடைய. உப்புநீர் பெய்தவித்தல் எனமாறுக. சவி - ஒளி. (406) | | புற்றுமண்கோ சலமயநீ றறலிவற்றி லிங்கம் | | | புனிதங்கூ விளமுறிப்பைஞ் சாற்றின்மிக்க புனிதம் | | | அற்றவருக் கற்றபரம் பொருணிறைவுள் ளகத்தே | | | யறியினுயிர் புனிதந்தத் துவங்களினொற் றித்த | | | பெற்றிதெரி கிற்பினவை யும்புனித மாகும் | | | பிழைக்கினொரு சந்திசா தஞ்சதநான் மடங்கு | | | முற்றுகநான் கெனுஞ்சந்தி பிழைக்கினிறை பூசை | | | முடியாதேற் கோரமா யிரங்கணித்து முடிக்க. |
(இ - ள்.) சிவலிங்கம், புற்றுமண் ஆப்பி ஆநீர் திருநீறு நீர் என்னும் இவற்றால் தூய்மையுறும். இனி வில்வந்தளிர்ச் சாற்றாலே திரு முழுக்காட்டுதலே சிறப்பான தூய்மை என்ப. இறைப்பொருள் தன்னிடத்திலே நிறைந்துள்ளதனை உணரின் உயிர் தூய்மையுடையதாம். அவ்விறைப் பொருள் நாதமுதல் மண்ணிறுதி எல்லாத் தத்துவங்களினும் கலந்திருக்குந் தன்மையை உணர்ந்தவிடத்தே அத்தத்துவமும் தூயவாம். முதற்சந்தி வழிபாடு தவறின் சத்தியோசாத மந்திரம் நூறு முறை கணிக்க. நான்காஞ்சந்தி வழிபாடு தவறின் அம்மந்திரத்தை நானூறுமுறை ஓதுக. இறைவன் வழிபாடு தவறின் அகோரமந்திரத்தை ஆயிரமுறை கணித்துப் பின் வழிபாடு செய்து முடித்திடுக. (வி - ம்.) கூவிளமுறி - வில்வந்தளிர். தத்துவங்கள் நாதமுதல் மண்ணீறாக உள்ளவை. சாதம் - சத்தியோசாதமந்திரம், கோரம் - அகோரமந்திரம் இவையிரண்டும் முதற்குறை. (407) | | அறிந்திறைவன் பூசைபுரி யாதொழியி னிரட்டி | | | யறைந்துபசித் தழல்வளர்க்க பன்னாளுந் தவறில் | | | சிறந்திடவிம் முறையேற்றிச் செய்தல்கட காதி | | | திரிமதியிற் பவித்திரஞ்சாத் தாதயர்ந்தான் பசித்துப் | | | பறைந்திடுக விருநியுத மறிந்தொழியி னிரட்டி | | | பன்னுகதீ யொழியினியற் றாநாள்க ளோம்பிப் | | | பிறங்கநியு தம்வருடத் தின்மதிக்கீ ரயுதம் | | | பிழைக்கினிவே தனங்காயத் திரிநூறு பேசல். |
|