| (இ - ள்.) அறிந்திருந்தே இறைவனை வழிபாடு ஒருநாள் செய்யாதுவிடின் இரண்டாயிரமுறை அகோரத்தைக் கணித்துத் தீயோம்புதலும் செய்க. பலநாள் வழிபாடு தவறிவிடின் இம்முறையை இரட்டிப்பாக்கி நாளுக்குநாள் ஏற்றிக் கணித்திடுக. ஆடி ஆவணி புரட்டாசி ஆகிய மூன்று திங்களினும் பவித்திரம் செய்து இறைவன் திருமுடியிலே சாத்தற்கு அறியாமல் தவறியவன் உண்ணாதிருந்து இருநூறாயிரமுறை கணித்திடுக. அறிந்தே பவித்திரஞ் சாத்தாதவன் நானூறாயிரமுறை கணித்திடுக. தீயோம்பத் தவறின் வழிபாடியற்றா நாள்களுக்குக் கூறிய கழுவாயே போன்று செய்க. ஓராண்டு தீயோம்பாதொழியின் நூறாயிரமுறை அகோரமந்திரம் கணித்திடுக. ஒரு திங்கட்குத் தீயோம்பாது விடின் இருபதினாயிரம்முறை அம்மந்திரத்தையே கணித்திடுக. இறைவனுக்குத் திருவமுதூட்டத் தவறின் காயத்திரி மந்திரத்தை நூறுமுறை ஓதுக. (வி - ம்.) அறிந்து தவறுதலாவது அறிந்திருந்தே பிறகாரணங்களால் தவறிவிடல். கடகம் - ஆடித்திங்கள். பறைந்திடுக - கணித்திடுக. (408) | | செந்தழலாற் கள்வராற் சிவலிங்கஞ் சிதையிற் | | | செப்பிநியு தங்குருவால் வேறிலிங்கங் கோடல் | | | வெந்தழற்பட் டழியாதேன் மூன்றயுதம் விளம்பல் | | | விமலவுரு வூறுபடிற் பரார்த்தத்து மொழித்தல் | | | எந்தையுருச் சுயம்பாகி லொருவற்க வுருவி | | | னெய்தினடி யீரயுதங் கடக்கினுருத் தூளி | | | பந்தமுறி னோரயுத நிழல்கடக்கிற் பீடப் | | | பரப்பினிற்சாய்ந் துறின்முந்நூ றறைகவுளம் பதைத்தே. |
(இ - ள்.) செந்நெருப்பினாதல் கள்வரானாதல் சிவலிங்கம் சிதைவுபடின் அகோரமந்திரத்தை நூறாயிரமுறை கணித்து மேலும் நல்லாசிரியனாலே வேறு சிவலிங்கம் அமைத்துக் கொள்க. வெவ்விய தீப்பட்ட மாத்திரையேயன்றிச் சிதைவிலாதிருப்பின் முப்பதினாறாயிரம் முறை அகோரமந்திரத்தைக் கணித்திடுக. இறைவன் திருவுருச் சிதைந்த விடத்தே அது செயற்கைத் திருவுருவாயவிடத்து அதனையும் அகற்றிடுக (வேறு உருவங் கொள்க) எம்பிரானுடைய திருவுருவம். தான் தோன்றியாய விடத்து அதனை அகற்றமுயலற்க. திருவுருவத்திற் கால்பட்டுவிடின் இருபதினாயிரமுறை அகோரம் ஓதுக. திருவுருவத்தே காலின் தூசிபடியின் பதினாயிரமுறை கணித்திடுக. திருவுருவ நிழலைக் கடந்தாலும், பீடத்தே இலிங்கம் சாய்ந்த விடத்தும் நெஞ்சுகலங்கி முந்நூறுமுறை அகோரமறைக. (வி - ம்.) பரார்த்தம் - மானிடர் செய்த உருவம். சுயம்பு - இயற்கையிலிருக்கின்ற உருவம். அடி உருவின் எய்தின் என்க. தூளி - காற்றூசி. (409) | | சற்றுருளி னாயிரம்பின் னுஞ்சற்றே லிரட்டி | | | சாலவுரு ளினுமுழந்தா ளுயர்வினா தாரம் |
|