| | பெற்றுகினு மயுதமா தாரமின்றி விழினும் | | | பேழ்வாய்நீர் தெறிப்பினுமீ ரயுதமூன் றயுதம் | | | உற்றிடினே கோழைநியு தந்தாழ்ந்த புனலி | | | னுறினுநிரு மாலியநீர்த் தாழினுநன் றுரைக்கப் | | | பற்றியா ளுயர்வினிருந் துக்கிலிங்கம் விள்ளிற் | | | பக்கொழியிற் பீடமிவற் றிற்குவிதி யின்றே. |
(இ - ள்.) இட்டலிங்கம் கைப்பிழையானே சிறிதுருண்டவிடத்தே ஆயிரமுறை அகோரமந்திரத்தை ஓதுக. மேலும் சிறிதுருளின் இரண்டாயிரம்முறை அகோரத்தைக் கணித்திடுக. மிகவுருளினும் முழந்தாளுயரத்திருந்து ஆதாரமாகிய பெட்டகக் கோயிலோடு விழினும் பதினாயிரம் அகோரம் கணித்திடுக. ஆதாரமின்றி இலிங்கமட்டும் வீழினும் பெரிய வாய்நீர் இலிங்கத்தே தெறிப்பினும், இருபதினாயிரமுறை அகோரமோதுக. கோழை இலிங்கத்தே படின் முப்பதினாயிரமுறை கணிக்க. நீரின்கண் கைதவறி வீழினும் நிருமாலிய நீரில்வீழினும் நூறாயிரமுறை கணித்திடுக. இலிங்கம் ஓராள் உயரத்திருந்து வீழ்ந்து உடையினும் பீடம் பிளந்த விடத்தும் இவற்றிற்குக் கழுவாயில்லை. (வேறுலிங்கம் ஆசிரியன்பாற் கோடல் வேண்டும்) (வி - ம்.) சற்று - சிறிது. சால - மிகுதியாக. ஆதாரம் - பெட்டகக் கோயில். பேழ் - பெரிய. நிருமாலியநீர் - திருமுழுக்காட்டிய நீர். நன்று - பெரிதும். உக்கு - வீழ்ந்து. பக்கொழிதல் - பிளவுண்ணல். (410) | | குருநீழ லடியர்நிழற் கடந்திடின்முந் நூறு | | | கோமறையோர் விளக்கினிழல் கடக்கினொரு நூறால் | | | இருநாழி யரிசியிழி வறுகுறுணி யுயர்வெம் | | | மிறைவனிவே தனத்துக்குக் கிருமிமயிர் விரவின் | | | மருவாதேன் றொருவனிவே திக்கினொரு நூறு | | | மறையோர்முன் னால்வர்வளர் தீக்கையிலா ரிலிங்கத் | | | திருமேனி தொடிற்பூசை சிறப்பித்து முறையாற் | | | செப்பல்சத மிருசதமுச் சதநான்கு சதமே. |
(இ - ள்.) நல்லாசிரியர் நீழலையாதல் இறைவனடியார் நீழலையாதல் கடந்துபோக நேர்ந்துவிட்ட இடத்தே முந்நூறு முறையும் ஆன் பார்ப்பனர் திருவிளக்கு இவற்றின் நீழலைக்கடக்கின் ஒரு நூறுமுறையும் அகோரமந்திரத்தைக் கணித்திடுக. இனி இறைவனைத் திருவமுதூட்டுதற்கு அரிசியின் குறைந்த அளவு இருநாழியாகும். உயர்ந்த அளவு அறுகுறுணி என்க. இவ்வரிசி கிருமி மயிர் முதலியன விரவியதாதல் கூடாது. இவற்றோடு ஒருவன் திருவமுது செய்தூட்டின் இத்தீவினை தீர நூறுமுறை அகோரங் கணித்திடுக. அந்தணர் முதலிய நால்வருள் வைத்துத் தீக்கைப் பேறில்லாதார் சிவலிங்கத்தைத் தொடின் வழிபாட்டைச் சிறப்பவியற்றி நிரலே அந்தணர் முதலியோர்க்கு நூறுமுறை முதல் நானூறுமுறை ஈறாக அகோரமந்திரத்தைக் கணித்தல் வேண்டும். |