| (வி - ம்.) குரு - நல்லாசிரியன். அடியர் - சிவனடியார். கோ - ஆன். (411) | | வாமசம யத்தோர்கள் வனசரரா தியர்கை | | | மருவினயு தங்காக நாய்தொடின்மூ வயுதம் | | | தோமுறுநாய்க் கடுவான்பார்த் திடினயுத மைந்து | | | தொடினியுதங் கிளந்துபூ சனைசிறப்பச் செய்க | | | ஆமிறைவற் கறைந்தவிதிப் பாதிசெப மாலை | | | யருநூலா திகட்கதனிற் பாதிகண்டைக் காகும் | | | காமரருக் கியம்வீழி னுருளினுருச் சிதையிற் | | | கசிந்திருநூ றைஞ்ஞூறா யிரமுறையே கணித்தல். |
(இ - ள்.) வாம சமயத்தினரும் வேடர் முதலியோரும் சிவலிங்கத்தைத் தீண்டியவழி, பதினாயிரமுறை அகோரங் கணித்திடுக. இலிங்கத்தைக் காகம் நாய் முதலியன தீண்டின் முப்பதினாயிரமுறை கணித்திடுக. குற்றம் பொருந்திய நாய்க்கடுவான் சிவலிங்கத்தைப் பார்த்து விடின் ஐம்பதினாயிரமுறையும், அவன் தீண்டிவிடின் நூறாயிரமுறையும் கணித்து வழிபாடுஞ் சிறப்ப இயற்றுக. இலிங்கத்திற்குக் கூறப்பட்ட இக்கழுவாய்களுள் பாதி சபமாலைகட்கும் அரிய மெய்ந்நூல்கட்கும் கொள்க. அதிற்பாதி மணி முதலியவற்றிற்குக் கொள்க. விரும்புதற்குரிய வழிபாட்டுக்குரிய திருவமுது முதலியன வீழ்ந்துவிடின் மனம் வருந்தி இருநூறுமுறையும், உருளின் ஐந்நூறுமுறையும் உருச்சிதைந் தொழின் ஆயிரமுறையும் அகோரமந்திரத்தைக் கணித்திடல் வேண்டும். (வி - ம்.) வாமசமயம் - அகச்சமயமாறனுள் ஒன்று. உரையிற் கோடல் என்னும் உத்தியால் புறச்சமயத்தாரையுங் கொள்க. தோம் - குற்றம். நாய்க்கடுவான் - புலையனுக்கும் பார்ப்பனிக்கும் பிறந்தவன். (412) | | ஆட்டுகல சந்தவறித் திருமுடிதீண் டிடினீ | | | ரயுதமெணல் சிவலிங்க ஞானமுரு விற்போர்க் | | | கீட்டுகழு வாயில்லை யுணற்கிறைவன் பூசை | | | யியற்றினெவ ரேனும்பா தகரவரிற் புகுந்தால் | | | நீட்டுகரம் பட்டகல னொழிக்கவுமை யைங்கை | | | நின்மலனா தியர்பூசை யியற்றினுநற் பயனை | | | வீட்டினரே யவரொடுஞ்சாக் கியராதி யரொடு | | | மேவற்க மேவுறினீ றணிந்துசிவம் விளம்பல். |
(இ - ள்.) திருமஞ்சனமாட்டுதற்குரிய குடம் தவறி இறையுருவத்திருமுடியிலே பட்டுவிடின் இருபதினாயிரமுறை அகோரமந்திர மோதுக. இனி, சிவலிங்கத்தையாதல் ஞானநூலினையாதல் ஏனைத் தெய்வத் திருவுருவங்களையாதல் விற்றுவிட்டவர்க்கு நூல்கள் தொகுத்தவற்றுள் கழுவாய் கூறப்படவில்லை. இனி அன்பானன்றி உணவின் |