| பொருட்டு இறைவனை வழிபாடுசெய்வோர் எத்தகையரேனும் தீவினையாளரே என்றுணர்க. அவர் இல்லத்திற் புக்குழி அவர் நீட்டுங் கைபட்ட மண்கல முதலியவற்றை அகற்றிவிடுக. இனி இறைவி ஐந்து கையிறைவன் முதலிய தெய்வங்களுக்குங் கூலியின்பொருட்டு வழிபாடு செய்யினும் அவரும் தீவினையோரே. அத்தகையவரோடும் சாக்கியர் முதலிய புறச்சமயிகளோடும் கூடாதொழிக. கூடநேரின் அத்தீவினை கழியத் திருநீறு அணிந்து திருவைந்தெழுத்தைக் கணித்திடுக. (வி - ம்.) கலசம் - குடம். எணல் - வியங்கோள். ஞானம் : ஆகுபெயர். உருவென்றது - பிள்ளையார் முதலிய திருவுருவங்களை. ஒழிக்க வென்றமையால் கலம் மட்கலம் என்பதாயிற்று. ஐங்கைநிமலன் - விநாயகன். சிவம் என்றது திருவைந்தெழுத்தை. (413) | | கண்ணுதலா லயத்தேது கவரினுமுண் ணடுங்கிக் | | | கவர்ந்தபொரு ணாற்றியறிந் தேலைந்து நல்கிப் | | | பண்ணிடுக சாந்திரா யணங்குரவன் பார்ப்பார் | | | பண்ணியத்தே தெடுப்பினுமம் முறையுதவி நியுதம் | | | எண்ணிடுக விணங்கினவ னதன்பாத மிவனை | | | யிணங்கினவ னிதன்பாதி யீந்துமனுக் கணித்தல் | | | அண்ணலுருப் பதிட்டைசெயிற் குருப்பசித்தீர் நியுத | | | மைந்திலக்க நூலறியான் றீக்கைசெயி னறைக. |
(இ - ள்.) இறைவன் திருக்கோயிற்குரிய பொருள்களுள் எப்பொருளையேனும் ஒருவன் அறிவின்றிக் கவர்ந்து கொண்டக்கால் அத்தீவினை தீர மனநடுங்கி அப்பொருள் போன்று நான்குமடங்கு திருக்கோயிலுக்கு வழங்குதல் வேண்டும். அறிந்தே கவர்ந்திருப்பின் ஐந்து மடங்கு வழங்குக. மேலும் சாந்திராயண நோன்பும் நோற்றிடுக. நல்லாசிரியன் அந்தணன் என்னுமிவர் பொருளைக் கவர்ந்துழியும் இம்முறையே வழங்கி அகோரமந்திரம் நூறாயிரமுறை கணித்திடுக. கவர்ந்தவனோடு கூடினவன் அதிற் பாதி வழங்குக. கூடினவனைக் கூடினவனும் அதிற்பாதி வழங்குக. அம்மந்திரத்தையும் அம்முறையிலே கணித்திடுக. பிறர்பொருட்டு சிவலிங்கத் திருவுருவும் நிறுத்தின நல்லாசிரியன் உண்ணாதிருந்து நூறாயிரமுறை அகோரங் கணித்திடுக. மெய்ந்நூல் ஓதாத ஆசிரியன் தீக்கை செய்தால் அவ்வாசிரியன் ஐந்நூறாயிரமுறை கணித்திடுக. (வி - ம்.) கண்ணுதல் - சிவபெருமான். நாற்றி - நான்மடங்கு. ஐந்து - ஐம்மடங்கு. பண்ணியம் - பொருள். பாதம் - பாதி. மனு - மந்திரம். பதிட்டை - பிரதிட்டை ; நிறுத்துதல். (414) | | போதகனைச் சோதகனை முத்திதனைக் கடுஞ்சொற் | | | புகலினோ ரிலக்கமதிற் பாதியதிற் பாதி | | | ஓதியடி தாழ்ந்திரத்தல் கையவர்மேற் றாக்கி | | | னுரைத்தலா றிலக்கமா யுதத்தெறியி னிரட்டி |
|