பக்கம் எண் :

588தணிகைப் புராணம்

 மறையவனைச் செகுத்தானா யிரம்பசுவி னாப்பண்
           மண்டபஞ்செய் தீசான நியுதமெணல் பொருளன்
 முறையின்மக மாங்கியற்றல் சாந்திரா யணம்பின்
           முடித்தலல தொருமதிநீற் றறையினுருத் திரத்தைப்
 பொறியடக்கி யறைந்துறைதன் மதுவுண்டான் கோயிற்
           புருடமெணல் பொருளன்மகம் புரிதலவர் பராகம்
 நிறுவுதல்வாய்க் கோசலநெய் கஞ்சமொன்றை யழற்றி
           நிறைத்தலுமாம் பூதியறை யிருத்தலுமா மவர்க்கே.

(இ - ள்.) பார்ப்பனனைக் கொன்றவன் ஆயிரம் ஆண்கள்நிற்கிற நிரையின் நடுவிடத்தே மண்டபமெடுத்து ஈசானமந்திரத்தை நூறாயிரமுறை கணித்திடுக. பொருளுடையானாயின் நூன்முறையானே அவ்விடத்தே அறவேள்வி யியற்றுக. பின்னர்ச் சாந்திராயண நோன்பும் புரிந்திடுக. இன்றேல், ஒருதிங்கள் திருநீற்றறையுள் இருந்து பொறிகளை அடக்கிக்கொண்டு உருத்திரமந்திரத்தை நூறாயிரமுறை கணித்திடுக. கள்ளுண்டோன் திருக்கோயிலின்கண் இருந்து தற்புருடமந்திரத்தை நூறாயிரமுறை கணித்திடுக. பொருளுடையோனாயின் வேள்வி செய்க. மேலும் அவன் பராக நோன்பு மியற்றுக. அல்லது கள்ளுண்டான் வாயின்கண் ஆமூத்திரம் ஆனெய் வெண்கலம் என்னும் இவற்றுள் ஒன்றைத் தீயிலிட்டு விடுதலும் கழுவாயாகும். திருநீற்றறையில் கள்ளுண்டோரை வைத்தலும்
கழுவாயாகும்.

(வி - ம்.) மறையவன் - பார்ப்பனன். பொருளன் - பொருளுடையோன். நீற்றறை - திருநீற்றறை. கஞ்சம்- வெண்கலம். பூதி - விபூதி.

(417)

 ஆடகங்கொண் டான்கோர நியுதநன்காட் டறைக
           வாக்கமுளான் மகம்புரிக பிரசாபத் தியத்தால்
 வாடலவ ரிருப்புமுச லத்தான்மன் னவனான்
           மாய்தலுமா நீற்றறையு மாமறியா தொருநாள்
 கூடினவன் குருமனையை யழற்சாலை வாமங்
           கூறுகவுள் ளவன்வேட்க தத்தகிருச் சிரத்தை
 நாடலவர் குறிபீசம் பனைமடலால் வீழ்த்து
           நடந்துதென்றிக் கிறுதலுமா நீற்றறையு மாமே.

(இ - ள்.) பொன்னைக் களவுகொண்டவன் அகோரமந்திரத்தை நூறாயிரமுறை சுடுகாட்டின்கண் இருந்து கணித்திடுக. செல்வமுடையோன் வேள்வியும் புரிக. பிரசாபத்திய நோன்பால் உடல் வாடுதலுமாம். அவர் மன்னன்பாற் சென்று தங்குற்றங்கூறி அவனால் இருப்புலக்கையால் அடியுண்டு இறத்தலுங் கழுவாயாம். நீற்றறையிலிருந்து மாய்தலுமாம். ஆசிரியன்மனைவியை அறிவின்றி ஒருநாட் கூடினவன் வேள்விச் சாலையருகிருந்து வாமதேவமந்திரத்தை நூறாயிரமுறை கணித்து வேள்விசெய்து தத்தகிருச்சிர நோன்பு மாற்றுக. இனி அவர்