பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்589

தம்முடைய ஆண்குறியைப் பீசத்தோடு சேர்த்துப் பனைமடலாலே தாமே அரிந்து வீழ்த்திவிட்டுத் தென்றிசை நோக்கி நடந்துசென்று இறந்து போதலும் கழுவாயாகும். அல்லது நீற்றறையிலிருந்து மாய்தலுமாம்.

(வி - ம்.) ஆடகம் - பொன். நன்காடு - சுடுகாடு. வாடல் - வாடுக. அழற்சாலை - வேள்விமண்டபம். நாடல் - நாடுக. இறுதல் - சாதல்.

(418)

 உரைத்தவவ ரோடிணைந்தா ரோரிலக்கஞ் சாத
           மோங்கன்முடிக் கணிக்கநிதி யானங்கண் வேட்க
 கிருச்சிரமா மதிதபனங் கெழுமுகவான் வதைத்தான்
           கிளக்கநியு தங்கோர மறிந்தேன்மற் றிரட்டித்
 திரைத்தசுர நதியாடி விச்சுவநா தனைமுன்
           சென்றிறைஞ்சி யுணவாதி தீர்ந்தொருநாட் காசி
 வரைப்பமரி னறியாமா பாதகமொன் றகலு
           மதிதவிரி னறிந்தமா பாதகமொன் றறுமே.

(இ - ள்.) ஈண்டுக் கூறப்பட்ட தீவினையாளரோடு கூடினவர் மலையுச்சியிலிருந்து நூறாயிரமுறை சத்தியோசாதமந்திரத்தைக் கணித்திடுக. பொருளுடையோனாயின் அவ்விடத்தே வேள்விசெய்க. மேலும் அதிதபனம் என்னும் கிருச்சிரநோன்பையும் மேற்கொள்ளுக. அறியாமல் ஆனைக் கொன்றவன் அகோரமந்திரத்தை நூறாயிரமுறை கணித்திடுக. அறிந்தே ஆனினைக் கொன்றோன் அம்மந்திரத்தை இருநூறாயிரமுறை இயம்புக. இனி அலைவீசும் கடவுணதியாகிய கங்கையாற்றில் நீராடி விசுவநாதன் திருமுன்சென்று வணங்கி உணவு முதலியன ஒழித்து ஒருநாள் அக்காசிப்பதியில் உறைந்தோர்க்கு அறியாமற் செய்த பெருந்தீவினை ஒன்று ஒழியும்; ஒருதிங்கள் இம்முறையே அப்பதியிலிருந்து நோன்பு செய்தோர்க்கு அறிந்தியற்றிய பெருந்தீவினை ஒன்று கெடும்.

(வி - ம்.) ஓங்கல்முடி - மலையுச்சி. கோரம் - அகோரமந்திரம். சுரநதி - கங்கையாறு. மதி - திங்கள். தவிரின் - உறைந்திடின்.

(419)

 கேதார முதலான வெந்தைதலங் கணிக
           கிரியாதி நந்தலத்து மலமைந்துங் கீழ்ந்திட்
 டாதார முயிர்க்கிறையென் றறிந்தவடி யவர்த
           மடிப்பூசை யொருநாளோர் திங்களுற வியற்றின்
 ஏதாகு மியங்குநெறி யென்றியா தறிந்து
           மீட்டியமா பாதகங்க ளோட்டந்து விளியும்
 தீதான பலவினையு மூட்டாதங் கவர்தஞ்
           சேவடிபூ சித்திறைஞ்சி னோவுவதென் கிளத்தல்.