| (இ - ள்.) திருக்கேதாரம் முதலிய எந்தையார் திருத்தலங்களினாதல், திருத்தணிகை முதலிய எம்முடைய திருத்தலங்களினாதல் எய்தி ஆண்டுறையும் உயிர்க்கு ஐந்து மலங்களையுங் கெடுத்து ஆதாரமாயிருப்போன் இறைவனே என்று மெய்யுணர்ந்த அடியாரின் திருவடி வழிபாடு ஒருநாள் முதல் ஒருதிங்கள் அளவும் இயற்றியோர் மக்கள் ஒழுகுதற்குரிய நன்னெறியாதென எல்லாவற்றையும் அறிந்தும் செய்த பெருந்தீவினைகள் ஓடியொழியும் எனில், தீவினையான ஏனை வினைகள் முட்டின்றி அப்பெரியோர் சிவந்த திருவடிகளை வழிபட்டோரை விட்டு அகல்வதனைக் கூறவும் வேண்டுமோ. (வி - ம்.) கேதாரம் - ஒரு சிவதலம். கணிகவெற்பு - தணிகைமலை. முட்டாது - முட்டுப்பாடின்றி. (420) | | சண்ணித்த நீற்றினரா யக்கவடஞ் செறித்துச் | | | சங்கரன்மெய் யடியார்தம் பணிபுரியிற் பாவம் | | | மண்ணித்தங் கருத்தெல்லாம் வாய்ப்பருல காளு | | | மன்னனிளங் குமரர்குணங் குணமின்மை தெரியா | | | தண்ணித்தம் பண்பினொடும் வணங்குதல்போ லமல | | | னருள்வேடத் தவரையென்று மாயாதங் கவர்பால் | | | நண்ணித்தம் பரிவினிறைஞ் சுநரேவிண் ணாள்வர் | | | நலமின்மை தேர்ந்தனரே னரகமெலாந் துளைவார். |
(இ - ள்.) திருநீறு தரித்த மேனியையுடையராகவும் திருவக்கமணி யணிந்துகொண்டும் எம்பெருமானுடைய மெய்யடியாராகிய சிவயோகியர்க்குப் பணிபுரிவோர் தந்தீவினையெல்லாம் கழுவப்பட்டு மேலும் தாம் வேண்டுவனவெல்லாம் வேண்டியாங் கெய்தாநிற்பர். உலகத்தை ஆளாநின்ற வேந்தனுடைய இளமைந்தருடைய நற்குணந் தீக்குணங்களை ஆராயாமலே குடிமக்கள் அவர்பாற் சென்று அடக்கத்தோடும் வணங்குமாறு போன்றே இறைவன் திருவருட்குரிய வேடத்தோடு வருவோரைக் குற்றம் குணம் ஆராயாமலே அவர்பால் சென்று அன்போடு வணங்குபவர்களே துறக்கம் புகாநிற்பார். அவர்பால் நலமுண்மை இன்மைகளை ஆராய்வாரெனின் அத்தகையோர் நிரயத்துயர மனைத்தும் நுகர்பவராவர். (வி - ம்.) சண்ணித்தல் - பூசுதல். அக்கவடம் - கண்மணிமாலை. மண்ணித்தல் - கழுவப்படுதல். அண்ணி - அணுகி. (421) | | பனத்திபன வன்சிவவே டந்தரித்தோர் பிழைப்பிற் | | | பார்த்திபன்கொன் றானிரயம் படுவனவர் தம்மை | | | மனத்தருக்குத் தபக்குரவ னடக்கிநிலை நிறுத்தன் | | | மரபிரவிற் பிறர்பொருள்கள் வௌவியியங் குழியும் | | | துனித்தமரி லெதிர்ந்துபடை வழங்குழியு மறையோர்த் | | | துணிப்பினவன் பால்வழுக்குத் துன்னாது கொடுத்த |
|