| | தனத்தையிழந் துறுபாகந் தணந்திழிக்கப் பட்டுச் | | | சாதலுறிற் றடாதிருந்தான் றானேகொன் றவனாம். |
(இ - ள்.) அரசன் பார்ப்பனியாதல் பார்ப்பனனாதல் சிவனடியாராதல் தவறு செய்துழிக் கொன்றால் நரகத்தே வீழ்வன். அப்பார்ப்பனி முதலியோருடைய மனமாசு கெடும்படி ஆசிரியன் ஒறுத்தடக்கி நன்னெறி நிறுத்துதலே முறைமையாம். இனி, பார்ப்பனர் பிறர்பொருளைக் களவு செய்துகொண்டு இரவிற் செல்லுங்கால் பிடித்துக் கொன்றாலும் அல்லது பார்ப்பனரேயாயினும் பகைத்துவந்து படைவிட்ட காலத்துக் கொன்றாலும் அரசன்பால் தீவினை சேரமாட்டாது. ஒருவன் ஒருவனால் தான் கொடுத்த பொருளை இழந்தாதல் தனக்குரிய தாயப்பொருளை இழந்தாதல், இகழப்பட்டாதல் சாவத் தொடங்கினவிடத்தே அச்சாவிற்குக் காரணமானவன் அச்சாவைத் தடைசெய்யக் கடவன். தடா திருந்தால் தானே கொன்றவனாய் விடுவன். (வி - ம்.) பனத்தி, பனவன் - பார்ப்பனி, பார்ப்பனன். பார்த்திபன் - அரசன். தருக்கு - ஈண்டு மாசின்மேனின்றது. துனித்து - பகைத்து. ஒருவன் செய்த தீவினையால் மற்றையோர் இறப்பின் அவனுங் கொலைத் தீவினையைச் செய்தவனே என்பதாம். (422) | | வீடாத பிணிவெகுளி மற்றுளவே துவினால் | | | வெறுத்துடலைத் தான்றானே விடுத்தல்விடுத் திடினே | | | ஓடாநின் றருநிரயம் பதினாறா யிரமாண் | | | டுறுவனா லயத்தீங்கி னொழிப்பின் விண்ணா ளுவனால் | | | ஆடூஉவை மகடூஉவைக் குழவியைமன் குலத்தி | | | லடர்த்தவன்மூ வயுதம்வணி கக்குலத்தீ ரயுதம் | | | பீடாரும் பின்வருணத் தோரயுதம் பேசல் | | | பேசலா யிரஞ்சாதம் பூசையுயிர் தொலைத்தான். |
(இ - ள்.) தீராத நோயானாதல் சினத்தானாதல் பிறகாரணங்களானாதல் ஒருவன் தன்னை வெறுத்துத் தன்னுடலை விடாதொழிக. விட்டானாயின் தான் செல்லாநின்ற நரகத்தே பதினாறாயிரம் ஆண்டு கிடந்துழலாநிற்பன். திருக்கோயிற் றிருப்பணியின் பொருட்டு நிறைவேறாமை முதலிய காரணம்பற்றித் தற்கொலை செய்துகொண்டவன் சிவலோக மெய்துவன். அரசகுலத்தில் ஆடவரையாதல் மகளிரையாதல் குழவியையாதல் கொன்றவன் அகோரமந்திரத்தை முப்பதினாயிரமுறை கணித்திடுக. வணிக குலத்தினாயின் இருபதினாயிர முறையும் வேளாளர் குலத்திலாயின் பதினாயிரமுறையும் கணித்திடுக. பூனையைக் கொன்றவன் ஆயிரமுறை சத்தியோசாதமந்திரம் கணித்திடுக. (வி - ம்.) வீடாத - தீராத. ஆடூஉ - ஆடவர். மகடூஉ - மகளிர். மன்குலம் - அரசகுலம். பின்வருணம் - வேளாளர்குலம். பூசை - பூனை. (423) | | வானரமன் னந்தோகை வாரணம்பாம் பாதி | | | மாய்க்கினிரண் டாயிரங்கா ராமரைமான் மேடம் |
|