| | ஊனிலுயிர் பிரிக்கிலைஞ்ஞூ றேனமற்றும் வனத்தி | | | லுறுமிருகங் கெடுப்பினூ றுரைக்கநாய் நரியைத் | | | தானழிப்பிற் சாதமா யிரமெலிமூ டிகத்தைத் | | | தாக்கினூ றென்பிலுயிர் சவட்டுறினைம் பஃதால் | | | ஈனமுறு கிருமிபல வொருவைக லிறுப்பி | | | னெண்ணுதன்மூன் றயுதமுற வேறும்வினை பாறும். |
(இ - ள்.) குரங்கு அன்னம் மயில் கோழி பாம்பு முதலியவற்றைக் கொன்றால் இரண்டாயிரமுறையும், காரா, மரை மான் ஆடு முதலியவற்றைக் கொன்றால் ஐந்நூறுமுறையும், பன்றி முதலிய காட்டு விலங்குகளைக் கொன்றால் நூறுமுறையும், சத்தியோசாத மந்திரத்தைக் கணித்திடுக. நாய் நரியைக் கொன்றால் ஆயிரமுறையும், எலி பெருச்சாளி முதலியவற்றைக் கொன்றால் நூறுமுறையும், என்பில்லாத புழுக்களைக் கொன்றால் ஐம்பதுமுறையும், கீழான கிருமிகள் பலவற்றை ஒருநாளிற் கொன்றால் முப்பதினாயிரமுறையும் அம்மந்திரத்தைக் கணித்தால் ஏறாநின்ற தீவினை கெடும். (வி - ம்.) வாரணம் - கோழி. காரா - காராம்பசு. மேடம் - ஆடு. ஏனம் - பன்றி. மூடிகம் - பெருச்சாளி. பாறும் - அகலும். (424) | | குரங்குநரி நாயுரக மூறுசெயிற் றெறுக்கால் | | | கொட்டினுங்கண் டத்தளவு குளிர்புனலி னின்று | | | தரங்கமலி புனற்சடையிற் றலைமாலை மயிர்சூழ் | | | தண்கமல வதனமொளி ததைந்துசுழல் விழிமூன | | | றுரங்கலவு சருப்பவிருச் சிகமாலை வலநா | | | லொண்கரத்துச் சூலமழுத் தண்டுவர் ளிடநால் | | | கரங்கதுவு கட்டங்கந் தலைபலகை பாசங் | | | கருமேனி யிறையைநினைந் தயுதமெண்ணிற் றீரும். |
(இ - ள்.) குரங்கு நரி நாய் பாம்பு முதலியன கடித்தாலும், நண்டுத்தெறுக்கால் (தேள்) கொட்டினும், கழுத்தளவு குளிர்ந்த நீரின் கண் நின்று எம்பிரானுடைய அலைமிக்க கங்கையையுடைய திருச்சடையினையும் தலைமாலையினையும் மயிர்சூழ்ந்த குளிர்ந்த தாமரை மலர் போன்ற திருமுகத்தினையும் ஒளிநிரம்பச் சுழலாநின்ற மூன்று விழியினையும் கலந்த பாம்பு தோள்மாலைகளையும் வலப்பக்கத்துநான்கு கைகளிடத்தும் சூலமும் மழுவும் தண்டும் வாளுமாகிய நாற்படையினையும், இடப்பக்கத்துக் கைகள் நான்கினும் பொருந்திய கட்டங்கமும் தலையும் பலகையும் பாசமும் ஆகிய நாற்படையினையும் கரிய திருமேனியையும் உடைய அகோரத் திருவுருவத்தைத் தேனித்து அகோரமந்திரத்தைப் பதினாயிரமுறை கணிக்க அந்நஞ்சுகள் தீரும். (வி - ம்.) உரகம் - பாம்பு. தெறுக்கால் - நண்டுத்தெறுக்கால். தரங்கம் - அலை. மயிர் - தாடி. சருப்பம் - பாம்பு. விருச்சிகம் - தேள். கட்டங்கம் - கட்டுவாங்கம் என்னும் ஒரு மழுப்படை. (425) |