| | பரிவிடைதா னியந்தரணி யரிதாரஞ் செம்பொன் | | | பரிந்தேற்பி னாலயத்துப் பதிந்தயுதங் கணித்தல் | | | விரிதருகம் பளம்பஞ்சு தயிலம்பா றயிர்நெய் | | | வெஃகின்முந்நூ றறைதன்மட மேற்பினொரு நியுதம் | | | கரைதல்வினை தீரவொரு வன்கொடுக்கு முண்டி | | | கடைபோக வேலாது சின்னாளேற் றதனை | | | அரனருளா ரியனடியார்க் கூட்டியுண லவர்கட் | | | களித்தலொரு நாட்டவறி னறைந்திடனூற் றெட்டே. |
(இ - ள்.) குதிரை எருது கூலம் நிலம் அரிதாரம் செவ்விய பொன் என்னும் இவற்றை விரும்பித் தானமாக ஏற்றவன் திருக்கோயிலிலிருந்து பதினாயிரமுறை அகோரங் கணித்திடுக. விரித்தல் செய்யும் கம்பளம் பஞ்சு எண்ணெய் பால் தயிர் நெய் என்னுமிவற்றை விரும்பித் தானமேற்பின் முந்நூறுமுறை கணித்திடுக. திருமடத்தைத் தானமேற்பின் நூறாயிரமுறை அகோரங் கணித்திடுக. தீவினை தீர்தற்பொருட்டு ஒருவன் வழங்குஞ் சோற்றினை ஒருவன் தன் வாழ்நாள் முழுதும் ஏற்றல் ஒழிக. சிலநாள் மட்டும் ஏற்றுக்கொள்க. சோறேற்கும் பொழுது அதனையும் சிவனடியார் ஆசிரியன் முதலியோரைக் கூட்டிக்கொண்டு உண்ணுக. அவர்களைக் கூட்டி உண்ணலில் ஒருநாள் தப்பின் நூற்றெட்டுமுறை அகோரம் கணித்திடுக. (வி - ம்.) பரி - குதிரை. விடை - எருது. வெஃகின் - விரும்பிக் கொள்ளின். கரைதல் - கரைக. கடைபோக - ஆயுள்முடியுங் காறும். அரனடியார் என ஒட்டுக. (426) | | பிணியினமூப் பினகன்று பெறாதகரு வயிற்ற | | | பீண்முதிர்ந்த புனிற்றவிளங் கன்றினசாங் கன்ற | | | உணவெனப்பவ் வீயுண்ப விவையொழிந்த குடஞ்சுட் | | | டும்பர்பிராற் காட்டுறுமைந் துதவுவன வாகும் | | | அணவுபுகை நிறநீல நிறஞ்செம்மை வெண்மை | | | யருங்கபிலை நிறப்பசுவின் மயநீர்பா றயிர்நெய் | | | நணுமளவு பெருவிரலிற் பாதிபல மொன்று | | | நான்கொடுமூன் றொருமூன்று பலமிரண்டு கோடல். |
(இ - ள்.) நோயுடையனவும், கிழம்பட்டனவும், ஈனாதனவும் கருக்கொண்டுள்ளனவும், கருமுதிரப்பெற்றனவும், இளங்கன்றுடையனவும், கன்று சாகப்பட்டனவும், மலமுண்ணும் இயல்புடையனவும் என்னும் இவை ஒழிந்த ஏனைய ஆக்கள் தேவதேவனாகிய இறைவனுக்கு ஆட்டுதற்குரிய ஆனைந்தும் அளிப்பதற்குத் தகுதியுடையனவாகும். சூழாநின்ற புகைபோன்ற நிறமும், நீலநிறமும், செந்நிறமும், வெண்ணிறமும் அரிய கபிலநிறமும் என்னும் இந்த நிறமுடைய ஆன்களுடைய சாணகம் நீர் பால் தயிர் நெய் என்னும் இவ்வைந்தனுள் |