| நிரலே பெருவிரலிற் பாதியும் ஒருபலமும், ஏழுபலமும், மூன்றுபலமும் இரண்டுபலமும் கொள்க. (வி - ம்.) அஃதாவது புகைநிறப் பசுவின் சாணகத்தில் பெருவிரலளவிற் பாதியும் நீலநிறப் பசுவின் நீரில் ஒருபலமும், செந்நிறப் பசுவின்பால் ஏழுபலமும் வெண்ணிறப் பசுவின் தயிர் மூன்றுபலமும் கபிலநிறப் பசுவின் நெய்யில் இரண்டுபலமும் கூட்டியது ஆனைந்து என்றவாறு. (427) | | உரைத்தநிறத் தனவிலையேற் கபிலைநிறத் தைந்து | | | முறவேற்க வஃதுமரி தேனேர்ந்த துதவக் | | | கருத்தமைக மண்விழுமுன் கமலத்தில் வானிற் | | | கண்டித்து நடுமயத்தைக் கைக்கொள்க கன்று | | | பரித்தபசி யிரித்தபின்றைப் பால்கொள்க வறையொன் | | | பதுமரிசி யானாத றருப்பையினா னாதல் | | | வரைத்துமுக னிறமைந்து நடுக்கிழக்குத் தெற்கு | | | வடக்குமேற் கிட்டீசா னத்தைந்து மிடுதல். |
(இ - ள்.) ஈண்டுக் கூறப்பட்ட நிறமுடைய ஆன்கள் இல்லையாயின் கபிலநிற ஆனிலேயே சாணக முதலிய ஐந்தனையும் கொள்க. அக்கபிலநிறவானும் இல்லையாயவிடத்து வேறான்களிடத்துக் கொள்ளுதற்குக் கருதுக. இனிச் சாணகம் நிலத்திலே வீழுமுன்னரே இடைவெளியிலேயே முற்பகுதியையும் பிற்பகுதியையும் விடுத்து நடுச் சாணகத்தைத் தாமரையிலையிலே ஏற்றுக்கொள்க. கன்றின் பசிபோய பின்னர்ப் பால் கறந்திடுக. இனி ஒன்பது கோட்டங்களையும் அரிசியானாதல் தருப்பையினானாதல் வரையறுத்து முகத்திலே ஐந்து நிறங்களையும் பொதுமையினிட்டு நடுவும் கிழக்கும் தெற்கும் வடக்கும் மேற்கும் ஈசானத்தினும் ஐந்து நிறங்களையும் தனித்தனியே இடுக. (வி - ம்.) நிறத்தன : குறிப்பு வினையாலணையும் பெயர். ஐந்தும் - சாணக முதலிய ஐந்தும். இட்டு : செய்து என்ற வாய்பாட்டெச்சம். (428) | | வீறுசிவ தத்துவமே சதாசிவதத் துவமே | | | வித்தியா தத்துவந்தற் புருடதத் துவமே | | | கூறுதரு காலதத் துவமவ்வி யத்த | | | கோட்டஞ்சுப் பிரதிட்டை சுசந்தைதே சடுத்தங் | | | கேறுகல மரதனபாத் திரமமிர்த கலமே | | | யிலங்குசத்தி தத்துவபாத் திரமுறையர்ச் சித்துப் | | | பாறயிர்நெய் நீர்மயந்தெண் புனல்பெய்தொன் றாதி | | | பாலாதிக் கேறவீ சானமுதல் பகர்ந்து. |
(இ - ள்.) சிறப்புடைய சிவதத்துவ கோட்டாயநம என்றும், சதாசிவ தத்துவ கோட்டாயநம என்றும், வித்தியாதத்துவ கோட்டாய நமவென்றும், தற்புருடதத்துவ கோட்டாய நமவென்றும், கூறுபடுத்தாநின்ற |