பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்595

காலதத்துவ கோட்டாய நமவென்றும், அவ்வியத்த கோட்டாய நமவென்றும், தத்துவ கோட்டங்களையும் அவற்றில் வைக்கப்பட்ட கலங்களை நிரலே சுப்பிரதிட்டை சுசந்தை தேசோவற் பாத்திரம் மணிப்பாத்திரம் அமிர்தம் பாத்திரம் சத்திதத்துவ பாத்திரம் என்று அவற்றின் பெயரை அறிந்து முறையாக அவற்றையும் வழிபாடு செய்து அவற்றுள் பால் தயிர் நெய் ஆநீர் சாணகம் தெள்ளியநீர் இவற்றைநிரலே பெய்து பால் முதலியவற்றிற்கு ஒன்றுமுதலாக ஏற்றி ஈசான முதலிய மந்திரத்தைக் கணித்தல் செய்து.

(வி - ம்.) வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு. அரதனம் - மணி. தேசடுத்தங் கேறுகலம். என்றது, தேசோவற் பாத்திரம் என்றவாறு.

(429)

 வெற்றபுனற் கறுகுகுசை சந்தனமிட் டறுகால்
           விமலகா யத்திரியை விளம்பிமய மாதி
 உற்றநீ ராதியிடை மூலத்தா லொடுக்கி
           யுதகமும்வே றதிற்காயத் திரியினா லொடுக்கி
 மற்றதனைப் பிரமாங்கஞ் சிவகாயத் திரியு
           மனுமூல நூற்றெட்ட னோடுமந் திரித்து
 நற்றிசைபந் தனமாதி புரிதலிக்கவ் வியத்தை
           நயந்திறைவற் காட்டிநுகர்ந் திடின்வினைக ணலிமே.

(இ - ள்.) வெறுநீர் உடைய பாத்திரத்தின்கண் அறுகும் தருப்பையும் சந்தனமுமிட்டு ஆறுமுறை சிவகாயத்திரியைக் கணித்துச் சாணக முதலியவற்றை நீர் முதலியவற்றோடு மூலமந்திரமோதிக் கூட்டி, அதனோடு சிவகாயத்திரியை ஓதித் தூயநீரையும் கூட்டி அக்கூட்டரவிற்குச் சங்கிதையையும் சிவகாயத்திரியையும் நூற்றெட்டு மூலமந்திரத்தோடே கணித்து நல்ல திசைப்பந்தனமும், அவகுண்டனமும், தேனுமுத்திரையும், பிறவும் இயற்றுக. இங்ஙனம் வழிபாடு செய்து கூட்டிய ஆனைந்தினை விரும்பி இறைவனுக்கு ஆட்டித் தாமு நுகர்ந்திடின் தீவினைகள் கெடும்.

(வி - ம்.) வெற்ற - வறிது. மயம் - கோமயம். சாணகத்தை ஆநீரினும் ஆநீரை நெய்யினும் இவ்வாறு கூட்டி என்க. பிரமாங்கம் - சங்கிதா மந்திரம். நலிம் - நலியும்.

(430)

 வறும்புனலுக் களவுதொடி யொன்றாம்பாத் திரந்தான்
           மாசையிர சதமுமாம் பலாசுசெம்பு மாகும்
 உறும்பரிவின் வினைதீர்ப்பான் குடாதுமுக மான
           வும்பர்பிராற் காட்டியது பகலுண்டு துயிலின்
 குறும்பிரவு மொரீஇக்குணா தானனத்த னாகிக்
           கோலம்வளர் திருமேனி விழியிரண்டு மழுந்தப்
 பறும்பிரண வங்கலந்த மூலமெண்ணன் முறையாம்
           பேசியைந்து மிதயமெளி தாட்டிநுகர் தலுமாம்.