பக்கம் எண் :

596தணிகைப் புராணம்

(இ - ள்.) வெறுந்தண்ணீர்க்கு அளவு ஒரு தொடியாகும். பாத்திரங்கள் பொற்பாத்திரமும் வெள்ளிப் பாத்திரமுமாம். பலாசுப் பாத்திரமும், செப்புப் பாத்திரமும் ஒரோவழிப் பொருந்தும். மிகுகின்ற இரக்கத்தானே தீவினைகளைக் கழுவக் கருதுபவன் மேற்குமுகமாக வீற்றிருக்கின்ற தேவதேவனாகிய இறைவனுக்கு இவ்வானைந்தும் ஆட்டிப் பகலிலே உணவருந்தி, இரவிலே துயிலின் குறும்பினை அகற்றி விழித்திருந்து கிழக்கு நோக்கிய முகமுடையனாய் அழகு மிகாநின்ற இறைவனுடைய திருமேனியின்கண் இருவிழிகளும் அழுந்தும்படி நோக்கி ஆசிரியன்பாற் பெற்ற பிரணவமந்திரங் கலந்த மூலமந்திரத்தைக் கணித்தல் முறையாகும். இனி, பிரணவமோது முரிமையில்லாதார் இதயமந்திரமும் திருவைந்தெழுத்துங் கணித்து எளிதாக இறைவனுக்கு ஆட்டித் தாமும் பருகுதலும் ஆகும் என்க.

(வி - ம்.) முன்னர் ஆனைந்திற்கும் அளவு கூறப்பட்டது. எஞ்சிய வறுநீர்க்கு அளவு ஒரு தொடியாம் என்றவாறு, மாசை - பொன். இரசதம் - வெள்ளி. தீர்ப்பான் : வினையாலணையும் பெயர். ஆனனத்தன் - முகமுடையோன்.

(431)

 பிழைதணப்பத் தனையொருவ னடுப்பினா சிரியன்
           பின்பக்கத் தட்டமியி னிசியானைந் தாட்டி
 விழைதகுநல் லுணவூட்டிப் பதினான்கு காறும்
           விளைப்பினறுந் தீவினைகள் விளியநலம் பெருக
 மழைதவழ்கண் டத்தனரு ளாற்பயோ ததியின்
           வந்தபயோ தரியேதா யேபற்று கென்னாத்
 தழைதருபுல் லருத்தியருக் கியந்தெளித்தர்ச் சித்துத்
           தாழ்ந்துபால் கறந்திறைவற் காட்டின்வினை சாயும்.

(இ - ள்.) ஒருவன் தான் செய்த தீவினையைக் கழுவுதற்பொருட்டு ஓராசிரியனை அடுத்த பொழுது அவ்வாசிரியன் தேய்பிறைப் பக்கத்து எட்டாநாளிரவு அவன் பொருட்டு இறைவனுக்கு ஆனைந்தாட்டித் திருவமுதூட்டிப் பதினான்காநாள் முடியுங்காறும் வழிபாடு செய்யின் அவன் செய்த தீவினைகள் கெட்டொழியும். இனி ஐந்துமுதவும் நல்லாவை நீலகண்டத்து இறைவன் திருவருளாலே உலகின்கண் நலம் பெருகும் பொருட்டுத் திருப்பாற் கடலிலே பிறந்த பான்மடியுடையோய்! கடவுளன்னாய்! திருவாயேற்றருளுக என்று இரந்து அதற்குத் தழைத்த புல்லூட்டி வழிபாட்டுநீர் தெளித்துப் பரவி வணங்கிப்பாலைக் கரந்து எம்மையாளுடைய இறைவனுக்கு அப்பாலைமட்டும் ஆட்டினும் எத்தகைய தீவினையும் கெட்டொழியும்.

(வி - ம்.) பிழை - தீவினை. நிசி - இரவு. பதினான்காநாள், தீவினைகள் அறும் என மாறுக. பயோததி - பாற்கடல்.

(432)

 புனலிடையாழ்ந் திருந்துவளி தடுத்திறையை நினைந்து
           புகல்சிவகா யத்திரிநூற் றெட்டுளத்தி லெண்ணில்