| (வி - ம்.) பளிங்குவரை - படிகமலை. மயிர் - தாடிமயிர். உதக்குத் திசை - வடதிசை. தெரிவை - உமை. (434) | | கடுக்கைமதிச் சடிலமூ வைந்துவிழி வலப்பாற் | | | கரமைந்தின் வேலபயஞ் சூலங்கட் டங்கம் | | | முடுக்குமிசைத் துடியிடப்பாற் கரமைந்தின் வரத | | | முதிர்சுவைத்தா டிமம்பாம்பு செபவடமுற் பலமும் | | | தொடுக்குமிலக் கணத்தமைந்த முப்பதிற்றீ ருறுப்புந் | | | துன்னுவய தீரெட்டும் பளிக்குருவுந் திகழும் | | | அடுக்குமொளிச் சதாசிவதத் துவதவிசிற் பதுமத் | | | தடிகளிணை யடிகடொழ நெடுவினையும் விடுமே. |
(இ - ள்.) கொன்றை மலரும், பிறையும், சடையும், பதினைந்து திருவிழிகளும், வலக்கைகள் ஐந்தினும் வேலும், அபயமும், சூலமும், கட்டங்கமும், இசையை முடுக்காநின்ற துடியும், இடக்கைகள் ஐந்தினும் வரதமும், சுவைமிக்க மாதுளமும், பாம்பும், செபமாலையும், நீலமலரும் உடையராய், இங்ஙனம் அறிஞரால் தொடர்புபடுத்துக் கூறப்பட்ட இலக்கணமமைந்த முப்பத்திரண்டு உறுப்பும், பதினாறாண்டகவையும், பளிங்குபோன்ற திருமேனியும் உடையராய்த் திகழாநின்றவரும், ஒளி பொருந்திய சதாசிவ தத்துவமாகிய இருக்கையின்கண் எழுந்தருளியிருப்பவருமாகிய எம்பெருமானுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளைப் பாவனைசெய்து தொழ மிகப்பழைய வினைகளும் கெட்டொழியும். (வி - ம்.) கடுக்கை - கொன்றை. சடிலம் - சடை. தாடிமம் - மாதுளை. உற்பலம் - நீலோற்பலம். (435) | | ஐவருக்குந் திருமேனி யலர்முகத்தி னிறமே | | | யவிர்விழியு மறைந்தனவே யைவருக்கும் வலப்பால் | | | கைவயங்கு திரிசூலம் வரதமிடக் கரத்திற் | | | கண்மணிமா லிகையபயந் திலகமும்வண் டோடு | | | மைவகுத்த வளகமுங்கொண் டுமைமுகம்போ லிருந்த | | | வாமதே வரையொழிந்த நால்வருக்குஞ் சடிலப் | | | பைவளரு மரவுமதி யுளபகரெண் கையும் | | | பற்றிடுவர் கோரரைவர்ப் படர்ந்தவர்க்கென் பிழையே. |
(இ - ள்.) ஐந்து மூர்த்திகட்கும் திருமேனி அவ்வம் மூர்த்தியின் மலர்ந்த முகத்தின் நிறமேயாம். விழியும் மும்மூன்றே. ஐந்து மூர்த்திக்கும் வலப்பகுதிக் கையில் விளங்கும் முத்தலைச் சூலமும், வரதமும் இடப்பக்கத்துக் கையில் கண்மணிமாலையும், அபயமும் உள. திலகமும், வளவிய தோடும் முகிலொத்த கூந்தலும் உடையராய் உமையம்மையார் திருமுகம் போன்று முகமுடையராயிருந்த வாமதேவரை ஒழிந்த ஏனை நால்வருக்கும் சடையும், அரவமும், பிறையும் உள முற்கூறிய படைக்கலன்களை அகோரமூர்த்தி தம் மெட்டுக் கைகளினும் பற்றியிருப்பர். அம்மூர்த்தியை நினைப்பவர்க்குத் தீவினை ஒரு சிறிதும் உளதாகாது. |