| (வி - ம்.) கண்மணிமாலிகை - உருத்திராக்கமாலை. தோடு - குழை. கோரர் - அகோரமூர்த்தி. (436) | | தவளநிறங் கனகநிறஞ் சிந்தூர நீலந் | | | தனுவிதய தேவர்முத னால்வர்க்கு மேனை | | | அவிருறுப்புப் பகர்ந்தனவே நேத்திரங்கட் கிரவி | | | யலங்குமதி கனலுருவ மபயவர தங்கை | | | இவர்முகமொவ் வொன்றுவிழி யிவ்விரண்டத் திரருக் | | | கெதிரறுசெவ் வரத்தவுருக் கரதலமீ ரைந்து | | | சிவனயன மொருமூன்றுஞ் சினத்திடித்த குரலுந் | | | திகழுமிவ்வா றறுவரையுந் தேரின்வினை தீரும். |
(இ - ள்.) இதயதேவர் சிரதேவர் சிகைத்தேவர் கவசதேவர் என்னும் நால்வருக்கும் உடலின் நிறம் நிரலே வெண்ணிறமும், பொன்னிறமும், சிந்தூரநிறமும், நீலநிறமுமாம். விளங்குகின்ற ஏனைய வுறுப்புக்கள் முற்கூறப்பட்டனவேயாம். நேத்திரதேவர் மூவர்க்கு முகம் ஒவ்வொன்றேயாம். நிறம் நிரலே ஞாயிறு, இயங்குந் திங்கள், தீ என்னுமிவற்றின் நிறமாம். கையிரண்டே ; அவற்றில் அபயமும் வரதமும் உள. விழியும் இவ்விரண்டே. அத்திரதேவர்க்கு ஒப்பற்ற செவ்வரத்த மலர் நிறமும், பத்துக் கைகளும், கண்கள் மூன்றும், வெகுண்டுரப்பிய குரலும் உள்ளனவாம். விளங்கும் இத்தேவர் அறுவரையும் இப்படிப் பாவனைசெய்து வழிபடின் தீவினைகள் அனைத்தும் தீர்ந்தொழியும். (வி - ம்.) தவளம் - வெள்ளை. தனு - உடல். சிவனயனம் - சதாசிவத்திற்குரிய கண்கள் என்க. (437) | | வாக்காதி கடந்துமறை கடந்தொளிரு மிறைவன் | | | மன்னுயிர்கட் குடலாதி வழுக்கின்வழுக் கறுத்து | | | நோக்காமைத் தனைநோக்கு மியல்பருளும் பொருட்டு | | | நுவன்றவா றருண்மேனி யருளினா தரித்தான் | | | தீக்கான்மண் புனல்வான மிருசுடரான் மாவுந் | | | திலத்தினுறு நெய்யென்னச் செறிந்துபிரி வில்லான் | | | தாக்காமை யெத்தொழிலும் புரிந்திடுமெண் குணத்தான் | | | றனாதியலை யறிவாரார் தாளடையி னல்லால். |
(இ - ள்.) வாக்கு முதலியவற்றையுங் கடந்து வேதாகமங்களையுங் கடந்து அப்பாலாய் விளங்காநின்ற இறைவன் நிலைபெற்ற உயிரினங்கட்கு (உடல் முதலியவற்றை அருளி) உடல் முதலியவற்றால் தீவினை செய்த விடத்தே அத்தீவினைகளைக் கழுவாய்செய்து தன்னை அறியாமே அறிந்துகொண்டுய்யுமொரு தன்மையினை உண்டாக்கத் திருவுளங்கொண்டு யாம் ஈண்டுக் கூறியவாறு இந்த அருட்டிருமேனிகளை மேற் கொண்டருளினான். இங்ஙனம் அவனருளாலே காட்டாக்கால், தீயும் காற்றும் நிலனும் நீரும் வெளியும் ஞாயிறுந் திங்களும் உயிரும் என்னும் |