பக்கம் எண் :

600தணிகைப் புராணம்

இவ்வெண் பொருளினும் எள்ளில் நெய்போன்று அகமும் புறமுஞ் செறிந்து எக்காலத்தும் பிரியாது உறைபவனும், பற்றின்றியே தொழில் பலவும் செய்பவனும், எண்குணமுடையோனுமாகிய அவ்விறைவனுடைய இயல்பினை அவனருளாலே அவன்றாள் அடைந்த சான்றோரையல்லது யாரே உணர்ந்துகொள்ள வல்லுநராவார்.

(வி - ம்.) வாக்காதி - வாக்கும் மனமும். மறை - வேதம்; மறையாதி என்க. உடலாதி ஈந்து அவற்றால் வழுக்கின் என்க.

நோக்காமைத் தனைநோக்கு மியல்பாவது - "அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதேஅறிந்" திருத்தல் என்க.

"காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்றெழுந்த திருநாவுக்கரையர் திருவாக்கு முணர்க.

(438)

 கண்ணிகுத்தி வலைதொடுத்துக் கருதுறுபுள் ளுவர்போற்
           கருணையா லுயிர்திருந்தக் கருதியந்த விறைவன்
 நண்ணியநற் றலங்களினை யடுத்தடிப்பூ சனையு
           நயந்தடியர் பணியுமுறின் வினைகளெல்லா நலியும்
 விண்ணிவர்பல் போகமெல்லாம் வேட்டாங்கங் குதவும்
           வெய்யமல மூன்றுமழற் றுய்யெனவெந் தவிய
 எண்ணரிய முத்தியுமா ரியனாகி ஞான
           மீத்தருளு மிதுவல்லார் தமைப்பிறப்பி னிழிக்கும்.

(இ - ள்.) பறவைபிடிக்கக் கண்ணிகுத்தியும் வலைகட்டியும் அவற்றைப் பிடிக்கக் கருதும் வேடர்போன்று அந்த இறைவன் தனக்கியல்பாயுள்ள பேரருள் காரணமாக உயிர்களைத் தன்னெறிப்படுத்த எழுந்தருளியிராநின்ற சிறந்த தலங்களை அடைந்து ஆங்கு அவ்விறைவன் திருவடி வழிபாடும் விரும்பிச்செய்து அவன் மெய்யடியார்க்குக் குற்றேவலும் புரிந்தவிடத்தே தீவினைகள் அனைத்தும் கெடும். மேலும் துறக்கங்களிலே சென்று நுகருகின்ற பல்வேறு இன்ப நுகர்ச்சிகளையும் விரும்பியபடியே அளிக்கும். பிறப்பிற்குக் காரணமான கொடிய மலமூன்றும் தீயிற் பஞ்சென வெந்தகலாநிற்பக் கருதுதற்கு மியலாத பேரின்ப வீட்டினையும் நல்லாசிரியனாகி மெய்ஞ்ஞானமருளி எய்துவித்து உய்விக்கும். இவ்வழிபாடுவல்ல அன்பரை இங்ஙனமாக அவ்வழிபாடே படிமுறையானே பிறப்பினின்றும் அகற்றிக் கரைசேர்க்கும் என அறிக.

(வி - ம்.) வேடர் பறவைகளைத் தம் வயப்படுத்துக்கொள்ளக் கண்ணி முதலியன குத்துதல்போன்று, இறைவன் உயிர்களைத் தன்னடி நீழலிற் சேர்த்துக்கோடற்கு அருட்டிருமேனி கொண்டு தலந்தோறும் உறைகின்றான் என்று உவமையை நன்கு விரித்துக் காண்க.

(439)

 வினைதீருங் கழுவாய்கள் பலமொழிந்தா மேனு
           மேலான கழுவாய்மெய்ஞ் ஞானமே யாகும்