பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்601

 கனைவானத் திருளனுக்கு மொளிபலவற் றுள்ளுங்
           கதிரவனே ரொன்றில்லை யதற்குநிக ரில்லை
 தனையாதுங் காட்டாதா ருயிரினைக்காட் டாது
           தற்பரத்தைக் காட்டாதத் தனிமலமும் பண்டை
 வினையோடு விளித்திறையைத் தருவதெனி லேனை
           வினைகெடுத்து வேட்டகதி தருமென்னல் வியப்போ.

(இ - ள்.) தீவினை தீர்தற்குரிய கழுவாய்கள் ஈண்டுப் பற்பல கூறினேமாயினும் அவற்றுள் ஒன்றாக உயர்ந்த கழுவாயாவது மெய்ஞ்ஞானமே யாகும். வானத்திற் செறிந்த பூத இருளை அகற்றும் ஒளிகள் பலவுளவாயினும் அவற்றுள் வைத்து ஞாயிற்றை ஒக்குமொளி பிறிதொன்றில்லை யன்றோ? அங்ஙனமே அம்மெய்ஞ்ஞானத்திற்கு ஒப்பான கழுவாய் பிறிதொன்றில்லை என்க. இனிப் பொருள்களை மறைக்கும் பூதவிருள் தன்னுருவையேனும் காட்டும்; ஆணவமலமாகிய இருளோ தன்னையுங் காட்டாது; உயிரினையும் காட்டாது; இறைவனையும் காட்டாது எனவே அதுவும் ஒப்பற்றதே யாகின்றது. இவ்வொப்பற்ற ஆணவமலத்தைப் பழவினைத் திரளோடே ஒருசேர அழித்து இறைவன் திருவடிகளையே உயிர்கட்கு வழங்குவது மெய்ஞ்ஞானமே எனின், அது எளிய தீவினைகளைக் கெடுத்து விரும்பிய பேற்றை யளிக்கும் என்பதன் கண் வியப்பேது மில்லையே.

(வி - ம்.) கனை யிருள், வானத்திருள் எனத் தனித்தனி கூட்டுக. ஒளி - திங்கள் முதலியன. அதற்கும் - அம்மெய்ஞ்ஞானத்திற்கும். அத்தனிமலமும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. அதுவும் ஒப்பற்றதென்பார் தனிமலம் என்றார்.

"ஒருபொருளும் காட்டா திருள்உருவங் காட்டும்இருபொருளும் காட்டாது இது." (திருவருட்பயன் - 23)

(440)

 கழுவாய்மற் றிதுமொழிந்தா மெனக்கதிர்வேற் படைஞன்
           கருணையினா லருளுதலுங் குறுமுனியு மகிழ்ந்து
 வழுவாய வினைநலிய விழுமியது வளர
           வந்துநறும் பாலாதி தருமென்ற பசுவின்
 குழுவாழு மெல்லையுமற் றதன்மரபுந் தெரியக்
           கூறுகென வாறுமுக னதன்சிறப்புத் தோன்ற
 முழுதாய வண்டத்தி னுலகமெலாம் பகுத்து
           மொழிந்தருளத் தொடங்கினான் விழுந்துவினை யோட.

(இ - ள்.) கழுவாயாகிய இம் மெய்ஞ்ஞானத்தியல்பு யாம் முன்னரே கூறினேமல்லமோ? என்று ஒளிவேற் படையினையுடைய முருகப்பெருமான் கருணையாலே திருவாய்மலர்ந்தருளிய அளவிலே, அகத்தியமுனிவரும் மிகமகிழ்ந்து "எம்பெருமானே! தீவினைகள் அழிதற்கும் நன்மை வளர்தற்குமாகப் பாற்கடலிலே தோன்றி இவ்வுலகிலே