| (இ - ள்.) பிரகிருதியின் அளவும் பதின்மடங்கு மிகும். அதனினும் அராகதத்துவம் நூறுமடங்கு அளவில் மிகும். நிகழ்கின்ற அராகதத்துவத்தினும் நூறுமடங்கு வித்தைதத்துவமும் அவ்வித்தை தத்துவத்தினும் நூறுமடங்கு நியதியும் அந்நியதியினும் நூறுமடங்கு காலதத்துவமும் அளவான் மிகும். அக் காலதத்துவத்தினுங் காட்டிற் கலை ஒரு நூற்றுப்பதினாயிரமடங்கு மிகும். அக் கலையினும் ஒருகோடி மடங்கு மாயை அளவில் மிகும். அம்மாயையினுங் காட்டில் சுத்த வித்தை ஒருகோடியே பதினாயிரமடங்கு மிகும் (என்றுமுணர்க.) (444) | | சுத்தவித் தையினவ் வளவுநா தாந்தஞ் | | | சொன்முறை யேறுமிவ் வனைத்தும் | | | வித்தகன் விளையாட் டாகவாக் கியதான் | | | மெத்திய வுயிர்த்தொகை யோடும் | | | அத்திற நிற்க மண்ணினோ ரண்டத் | | | தமைந்தபல் லுலகத்தி னளவும் | | | கைத்தலக் கனிபோற் காட்டுது மெனத்தீங் | | | கலைமுனி மகிழவே ளியம்பும். |
(இ - ள்.) சுத்த வித்தையினின்றும் நாததத்துவ மீறாகவுள்ள தத்துவந்தோறும் இவ்வளவு படிப்படியாக வுயரும். இவ்வனைத்துலகங் களையும் எம்மையாளுடைய இறைவன் அவற்றின்கண் வாழும் உயிர்களோடு விளையாட்டுப் போன்று மிகமிக எளிதாகவே படைத்தருளினன். இதுநிற்க; இனி இம்மண்ணண்டத்தின்கண் அமைந்த பலவாகிய உலகங்களின் அளவும் நினக்குக் கையின்கண்ணுள்ள நெல்லிக்கனி போன்று ஐயந்திரிபற உணர்த்துதும் என்று அவ்வகத்திய முனிவன் மன மகிழும்படி முருகவேள் கூறாநிற்பன். (வி - ம்.) கனி - நெல்லிக்கனி. தீங்கலைமுனி - அகத்தியன். வேள் - முருகவேள். (445) | | ஐம்பது கோடி கீழண்டச் சுவரோ டவனியின் காறுமே லற்றே | | | ஐம்பது கோடி புடைச்சுவ ரோடு மாடகக் கிரிவரை கடாகம் | | | தன்புறத் திசையிற் புவனநூ றவற்றுட் டங்குவர் நூற்றுவ ருள்ளால் | | | தென்படு புவன மாறுமேக் கிரண்டு சிவணுவ தெளிகமா தவனே. |
(இ - ள்.) மாதவனே! கீழண்டவோடு தொடங்கி மண்ணுலகங்காறும் ஐம்பதுகோடி யோசனையாகும். இனி மண்ணுலகத்தினின்றும் மேலண்டவோடு காறும் ஐம்பது கோடி யோசனையுயரம் என்றே யுணர்க. இனி அண்டப்புறவோடு தொடங்கிப் பொன்மலை வரையில் நான்குதிசையும் ஐம்பது கோடி யோசனைதூரம் என்றறிக. இவ்வண்டகடாகத்தின்புறத்தே நூறுபுவனங்கள் உள. அவற்றில் உருத்திரர் நூற்று வரும் உறையாநிற்பர். அவற்றிற்குமேல் காலாக்கினிருத்திரர் முதலியோர் உறையும் புவனம் ஆறுள்ளன. அவற்றின் மேலும் இரண்டு புவனங்கள் உள என்றுணர்க. |