பக்கம் எண் :

604தணிகைப் புராணம்

(வி - ம்.) அற்று - அத்தன்மைத்து. ஆடகக்கிரி - பொன்மலை; மேரு.

(446)

 பித்திகைக் கனமோர் கோடிமேற் கோடி
           யோசனை பொன்மனை பிறங்கும்
 தொத்தழற் கொழுந்தீ ரைந்தெனுங் கோடி
           துதைந்தெழும் புகையுமைங் கோடி
 பைத்தவம் மனையி லாயிர நீண்டீ
           ராயிரம் பரந்தது தவிசங்
 குத்தமன் காலத் தீயிறை யயுத
           யோசனை யளவின்வீற் றிருக்கும்.

(இ - ள்.) அண்டபித்திகையின் கனம் ஒருகோடி யோசனை. அதற்குமேல் கோடியோசனை தூரம் காலாக்கினிருத்திரருடைய பொன்மனை விளங்கும். அவருடைய திருமேனியிலுண்டாகும் தீக்கொழுந்து பத்துக்கோடி யோசனையுயரம் செறிந்தெழாநிற்கும். அதனாலுண்டாகும் புகை அதற்குமேல் ஐந்துகோடி யோசனையுயரம் எழாநிற்கும். காலாக்கினிருத்திரருடைய பசிய அப்பொன்மனையின் நாப்பண் ஆயிர யோசனை நீளமும் ஆயிரயோசனை அகலமுமுடைத்தாய் விரிந்துள்ள அரியணை ஒன்றுளது. அவ்வணையின்மேல் காலாக்கினிருத்திரன் பதினாயிர யோசனை உயரமுடையனாய் வீற்றிருப்பன்.

(447)

 வலக்கைவாள் பகழி யிடக்கரம் பலகை
           வார்சிலை தழுவுமவ் விறைபால்
 நலக்குமவ் வுருவி னுருத்திரர் பதின்மர்
           நயந்தன ரிருப்பரொவ் வொருவர்க்
 கலக்கணிற் றவிர்ந்த பரிசனர் கோடி
           யண்முவ ரவ்வயின் மேலால்
 கலக்கஞ ருறுத்து மளறெழு நான்கு
           கோடியுங் கதுவுறு மெல்லை.

(இ - ள்.) வலக்கையின்கண் வாளும், கணையும் இடக்கையின்கண் கிடுகும், நெடிய வில்லும் தாங்கிய அக்காலாக்கினியுருத்திரனைச் சூழ்ந்து நலமுடைய அவ்வுருவத்துடனே உருத்திரர் பதின்மர் விரும்பி வீற்றிருப்பர். அப்பதின்மர் தம்முள் ஒவ்வொருவர்க்கும் துன்பத்திலிருந்து விடுபட்ட ஒவ்வொரு கோடியுருத்திரர் பரிவாரமாகச் சூழ்ந்திருப்பர். அவ்விடத்திற்கு மேலே நெஞ்சத்தைக் கலக்குந் துயரத்தை யளிக்கும் இருபத்தெட்டுக் கோடி நிரயமும் பொருந்தியிருக்கும். இவற்றின் எல்லை எவ்வளவோ எனின்?

(448)

 முப்பது கோடி மேலிரண் டிலக்க
           மொழிந்தமுன் னெல்லையி னுயரம்