| | பப்பெனி லண்டப் பித்தியின் காறும் | | | பயிலுமவ் வயின்மிசை வெளிதான் | | | செப்புமுப் பதினா யிரமத னுச்சி | | | தீர்ந்தவோ ரிலக்கத்தின் கோடி | | | ஒப்பிலோர் புவன முடைத்தத னடுமேற் | | | கொண்பொன்கீழ் பாலிருப் புருவம். |
(இ - ள்.) முப்பது கோடியே இரண்டு நூறாயிரம் யோசனையாகும் முன் கூறப்பட்ட உயரத்தின் எல்லை. இனிப் பரப்பு எவ்வளவெனின்? அண்டபித்திகை வரையிலும் நாற்புறமும் விரிந்திருக்கும். இந்நரகலோகத்தின்மேலே இடைவெளி முப்பதினாயிர யோசனையுண்டு. அவ்வெளிக்குமேலே நூறாயிரங் குறைபட்ட ஒருகோடி யோசனை யுயரமுடைய ஒப்பற்ற கூர்மாண்டர் புவனமுளது. அதன் கீழ்ப்பகுதி இரும்பாகவும் நடுப்பகுதி மண்ணாகவும் மேற்பகுதி பொன்னாகவுமிருக்கும். (வி - ம்.) நடுமேல் மண் பொன்; முறைநிரல் நிறை. (449) | | மழுப்படை யூழித் தீயுருக் கராள | | | வதனவட் டித்தொளிர் விழியின் | | | விழுப்பொலந் தவிசின் விளம்புமேல் பாங்கர் | | | வீற்றிருந் தருள்வர்கூர் மாண்டர் | | | முழுப்பவன் னவர்நே ருருத்திரர் பல்லோர் | | | மொய்ப்பராங் கிளிமொழி யவரும் | | | குழுப்பயின் றேத்த லுறுவரக் கூர்மாண் | | | டரையளற் றினுக்கிறை யென்பார். |
(இ - ள்.) மழுப்படையேந்திய கையும் ஊழித்தீயை யொத்த உருவமும் கரியமுகமும் வட்டமாகத் திகழும் விழிகளும் உடையராய்ச் சிறந்த பொன்னிருக்கையின்கண் மேலேயுளதாகக் கூறப்பட்ட பொன்மயமாகிய பகுதியிலே வீற்றிருந்தருளுவர் கூர்மாண்டர். முழுதும் அவரையே ஒத்த எண்ணிறந்த உருத்திரர் அவரைச் சூழ்ந்திருப்பர். ஆங்கு இளிபோலும் இனிய மொழிபேசும் இளமகளிர் கூட்டமாகக் கூடி இனிது பாராட்டாநிற்ப இருந்தருள்வர். அக் கூர்மாண்டரை அந்நிரயலோகத்துக்கு வேந்தன் என்று அறிஞர் கூறுவர். (வி - ம்.) கராளம் - கறுப்பு. பொலம் - பொன். முழுப்ப - முழுதும். இளி - ஒரு பண். (450) | | சொற்றவான் புரிமே லொன்பதிற் றிலக்கந் | | | தூவெளி யதன்முடிக் கீழென் | | | றுற்றபா தலம்பத் திலக்கம்பொன் மயமே | | | யொருபதி னாயிர மகற்சி |
|