பக்கம் எண் :

606தணிகைப் புராணம்

 முற்றிடை வெளியு மன்னதே யிதற்கு
           மொழிந்தவே யேனைப்பா தலக்கு
 மற்றிதற் கீழ்பா லவுணர்நள் ளிடையி
           னுரகர்வா ளரக்கர்மேற் கமர்வார்.

(இ - ள்.) ஈண்டுக் கூறப்பட்ட கூர்மாண்ட புவனத்திற்கு மேலே இடைவெளி ஒன்பது நூறாயிர யோசனை யுயரமாம். அதன் முடியின் மேல் ஆபாத பாதாளமென்று கூறப்பட்ட பாதாளலோகம் பத்து நூறாயிர யோசனையுயரம் என்ப. அது பொன்மயமாயிருக்கும். அதன் அகலம் பதினாயிரயோசனையாம். அதற்கு மேலுள்ள இடைவெளியும் பதினாயிர யோசனையேயாம். இப் பாதாளலோகத்திற்குக் கூறப்பட்ட அளவே ஏனைய பாதாளலோகங்கட்கும் என்ப. இப் பாதாளலோகங்கள் ஒவ்வொன்றும் மூன்று பகுதியாயிருக்கும். கீழ்ப்பகுதியில் அவுணர்களும், இடைப்பகுதியில் உரகர்களும், மேற்பகுதியில் அரக்கர்களும் உறைவார்.

(451)

 இந்தவான் பிலத்தின் மிசையபா தாள
           முதலிரு மூன்றுங்கற் பதுமம்
 இந்திர நீலம் புட்ப ராகந்திண்
           ணிரசத நித்தில நிறமும்
 கொந்தொளி யொன்பான் மணிநிறங் களுநேர்
           கொள்ளுமேற் பிலமுடி விடத்துச்
 சுந்தரம் பழுத்த மகளிரெட் டிலக்கத்
           தொகையினர் குழுமுவர் மாதோ.

(இ - ள்.) இந்தச் சிறந்த பாதாளலோகத்தின் மேலுள்ள பாதாள முதலாகவுள்ள ஆறு பாதாளலோகங்களும் நிரலே பதுமராகநிறமும், இந்திரநீலநிறமும், புட்பராகநிறமும், திண்ணிய வெள்ளிநிறமும், முத்து நிறமும் ஒன்பது மணிநிறமும் கலந்தநிறமும் உடையனவாயிருக்கும். இப்பாதாளலோக முடியுமிடத்தே அழகுமிகுந்த எண்பதுநூறாயிரம் மகளிர்கள் கூடியிருப்பர்.

(452)

 எழுபிலத் தெல்லை மிசையிடை வெளிபத்
           தொன்பதிற் றிலக்கமே லயுதம்
 முழுதுண ராட கேசர்வாழ் புவன
           முற்றுமா யிரம்பொலங் கோயில்
 ஒழுகுவா ளரக்கர் தயித்தியர் சூழ்வ
           ருதன்மிசை மட்கனங் கோடி
 எழுபில மவற்றின் வழிக்குமா தார
           மிவரளற் றெல்லையும் வழிபோம்.