| (இ - ள்.) ( மேருவுக்குத் தென்றிசைக்கண் உள்ள பகுதிகள் அரிவருடகண்டம், கிம்புருடகண்டம் பாரதகண்டம் என்று கூறப்படும். மன முதலியவற்றைக் கவர்கின்ற இளாவிரத கண்டத்திலே உறைபவர் மாட்சிமையுடைய உருவம் பொன்னிறம். உணவும் அகவையும் முற் கூறப்பட்டனவே யாம். பத்திரகண்டத்திலுறைபவர் முழுதும் நெறிப்பினையுடைய குவளைமலரையே உண்பர். திங்கள் அழகினைக் கவர்ந்து கொண்டாற்போன்ற வெண்ணிற உடலுடையர், அவர்க்கு அகவை பதினாயிரம் யாண்டென்பர். (வி - ம்.) மனாதி - மனங் கண் முதலிய என்க. நெறி - நெறிப்பு. ஆயு - அகவை. (460) | | கேதுமா லத்தோ ருணவுகண் டகியின் | | | கேழ்கனி நிறங்கருங் குவளை | | | ஓதுறு மாயு ளயுதமே குருவி | | | னுறைபவ ருணவுபல் கனிகள் | | | மாதர்மெய் யுருவம் பசுமையாம் பதின்மூ | | | வாயிர வருடம்வாழ் வைகல் | | | காதல்சேர் மக்க ளாங்கவர்க் குளரோர் | | | கணத்தகட் டமர்ந்துதோன் றுவரால். |
(இ - ள்.) கேதுமாலகண்டத்தி லுறைபவர்க்கு உணவு வருக்கைப் பலாவினது நிறமிக்க கனியாகும். அவர்நிறம் கருங்குவளைமலர் நிறமாம். அவர்க்குக் கூறப்படும் வாழ்நாள் பதினாயிரமாண்டென்ப. இனிக் குருகண்டத்திலுறைபவர் உணவு பல்வேறு கனிகளாம். விரும்புதற்குக் காரணமான அவருடல் பச்சைநிறமாம். அவர்க்கு வாழ்நாள் பதின்மூவாயிரம் ஆண்டாம். குருகண்டத்தோர்க்கு அன்புசேர்தற்குரிய மக்கள் உளர். அம்மக்கள் கருவிலெய்திய ஒருநொடிப் பொழுதிலே முதிர்ந்து ஆணும் பெண்ணுமாகிய இரட்டைகளாய்ப் பிறவாநிற்பர். (வி - ம்.) கண்டகி - வருக்கைப் பலாப்பழம். முள்ளுடைமையாற் பெற்ற பெயர். மாதர் - காதல். வைகல் - நாள். மக்கள் என்னும் பன்மையால் இரட்டை யென்பது பெறவைத்தார். ஆணும் பெண்ணுமாய் என்பது சிவதருமோத்தரத்துக் கண்டது. (461) | | செப்பிய வருடந் தனில்வட ஞாங்கர்ச் | | | சந்திர தீவெனும் பெயர்த்தோர் | | | வைப்பும்வா யுவின்கட் பத்திரா கரப்பேர் | | | வைப்புமுள் ளனவவற் றமர்வார் | | | துப்புடை முனிவர் சாரணர் சித்தர் | | | சோமதீ வினர்மதி நிறத்தார | | | பப்புறு மற்றை வைப்பினர் செய்ய | | | பதுமநே ருருவின ரன்றே. |
|