பக்கம் எண் :

614தணிகைப் புராணம்

(வி - ம்.) மலயமால்வரை - பொதியமலை. பருப்பதம் - மலை.

(469)

 எழுதரும் பனுவ லாகம மேனைக் கலைகளு மிருடிகண் முதலாம்
 உழுவலன் புடையார்க் கருளவுந் திருமா லூற்றுதேந் தாமரைக் கிழவன்
 முழுதுடல் விழிக்குங் கடவுளா தியர்க்கு முன்னிய வரங்கொடுத் திடவும்
 செழுமணிக் களத்துத் தெய்வதக் குரிசி றேவியோ டாங்கிருந் ததுவே.

(இ - ள்.) மாந்தரால் எழுதுதற்கரிய வேதம் ஆகமம் முதலியவற்றையும் ஏனைக் கலைகளையும் முனிவர் முதலிய வழியன்புடைய மெய்யடியார்க்கு அருளிச் செய்தற் பொருட்டும் திருமாலும் தேன்றுளிக்குந் தாமரை மலர்மேலிருக்கும் பிரமனும் உடல்முழுதுங் கண்பெற்று விழியாநின்ற இந்திரன் முதலிய கடவுளர்க்கும் வேண்டிய வரங்களை அருளிச் செய்தற் பொருட்டும், செழிப்புடைய நீலமணிபோன்ற மிடற்றினையுடைய தேவர் முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மையாரோடு அக்கயிலையிலே எழுந்தருளி யிருந்தனர் என்றுணர்க.

(வி - ம்.) குரிசில் ஆங்கிருந்தது அருளவும் கொடுத்திடவுமேயாகும் என்க. செழுமணி - ஈண்டு நீலமணி. குரிசில் - தலைவன்.

(470)

 இத்தகு தீவின் யோசனை யிலக்க மிதுவளை யுவரியற் றப்பால்
 பைத்துறு சாகம் பாற்கடல் குசைப்பார் பரவையாந் தயிர்கிர வுஞ்சம்
 நெய்த்திரைக் கடல்சான் மலிகழை நீர்கோ மேதந்தே னிலயம்புட் கரணி
 சுத்தநீர் முறையா னொன்றற்கொன் றிரட்டி சொற்றதீ வலைகட லளவை.

(இ - ள்.) இத்தகைய இப் பாரதகண்டத்தின் அளவு நூறாயிர யோசனையாம். இதனை வளைந்து கிடக்கும் உப்புக்கடலும் அத்துணை யளவிற்று. அவ்வுப்புக் கடலுக்கும் அப்பால் சாகத்தீவுளது; அதற்கப்பால் பாற்கடல் உளது; அதற்கப்பால் குசைத்தீவுளது; அதற்கு அப்பால் தயிர்க்கடல் உளது; அதற்கப்பால் கிரவுஞ்சத்தீவுளது; அதற்கப்பால் நெய்யாகிய அலைகடல் உளது; அப்பால் சான்மலித்தீவுளது; அதற்கப்பால் கருப்பஞ்சாற்றுக் கடல் உளது; அதற்கப்பால் கோமேதத் தீவுளது; அதற்கப்பால் தேன்கடல்; அதற்கப்பால் புட்கரணித் தீவுளது. அதற்கப்பால் தூநீர்க்கடல் உளது. இத்தீவுகளும் கடல்களும் நிரலே ஒன்றற்கொன்று இருமடங்கு அளவான் மிகும்.

(வி - ம்.) பைத்துறு - பசுமையுற்ற. உப்புக்கடல் என்பது தோன்ற உவரி என்றார். பரவை - கடல். கழைநீர் - கருப்பஞ்சாறு, சொற்ற - கூறப்பட்ட.

(471)

 சாகமு னைந்து தீவுமெவ் வேழு
           தடவரை யுடையபுட் கரணி
 போகுயர் நேமி வரையென முழுதும்
           போந்துசூழ் பொருப்புடைத் ததன்மேல்