பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்615

 மாகர்சூ ழெண்மர் தத்தம திசையின்
           வதிவரவ் வறுநிலத் தவரும்
 ஏகிய பிணிமூப் பினர்களா யென்று
           மின்பமுற் றிருப்பரோ ரயுதம்.

(இ - ள்.) சாகத்தீவு முதலிய ஐந்து தீவுகளும் ஒவ்வொன்றும் ஏழேழ் பெரிய மலைகளையுடையனவாம். இனி, புட்கரணித் தீவு தன்பால் மிகவுயர்ந்த சக்கரவாளகிரி போன்று இடைவிடாமல் வலமாகச் சூழ்ந்திருக்கும் மானதகிரி என்னும் மலையையும் உடைத்தாம். சென்று திரியும் அம்மலையின்மேல் திக்குப்பாலகர் எண்மரும் சூழ்ந்து தத்தமக்குரிய திசைகளிலே வீற்றிருப்பர். சாகத்தீவு முதலிய அந்த ஆறிடங்களினும் வாழ்பவர் பிணி மூப்பு இல்லாதவர்களாய் எக்காலத்தும் இன்பமுற்றிருப்பர் இவர்க்கு வாழ்நாள் பதினாயிரமாண்டென்ப.

(வி - ம்.) போகுயர் - மிகவுயர்ந்த என்க. மாகர் - திக்குப்பாலகர். வதிவர் - உறைவர். பிணி மூப்பு எகியவர் என்க.

(472)

 எழுகடற் கப்பாற் பொன்னில மீரைங்
           கோடியீண் டுவர்சுர ரப்பால்
 முழுவதும் வளைந்த செம்மணி நிறஞ்சான்
           முதுவரை யயுதமப் புறத்துப்
 பழுதிரு ளுலக முப்பத்தைங் கோடிப்
           பத்தொன்ப திலக்கநா லயுதம்
 கொழுமணிப் பெருநீர்க் கடலப்பா லளவை
           கோடிமே லிருபத்தே ழிலக்கம்.

(இ - ள்.) இந்த ஏழுகடல்களுக்கும் அப்பால் பத்துக்கோடி யோசனை யளவிற்றாகப் பொன்னிலமிருக்கும் என்ப. இப்பொன்னிலத்தே தேவர்கள் உறைவர். அதற்கப்பால் நிலவுலகமனைத்தையும் வளைந்துள்ள சிவந்த மணிநிறமுடைய சக்கரவாளகிரி பதினாயிரம் யோசனை அளவுடைத்து. அதற்கப்பால் இருளுலகம் முப்பத்தைந்து கோடியே பத்தொன்பது நூறாயிரத்து நாற்பதினாயிரம் யோசனை அளவிற்றென்ப. அதற்கப்பால் கொழுவிய மணிபோன்ற நீரையுடைய பெரும்புறக் கடல் உளது. அதன் அளவு, ஒருகோடியே இருபத்தேழு நூறாயிர யோசனை என்ப.

(வி - ம்.) முதுவரை - ஈண்டுச் சக்கர வாளம்.

(473)

 மொய்யொளி தயங்கு நேமிமால் வரையின்
           முற்புற மியக்கர்க ளரக்கர்
 வெய்யபேய்க் கணங்க ளமர்வரெண் டிசையின்
           விண்ணவ ரெண்மரு மமர்வர்