பக்கம் எண் :

616தணிகைப் புராணம்

 மையிருள் பொதிந்த வவ்வரைப் புறத்து
           வதிவர்தம் முடலினைத் தாமே
 கையறச் செகுத்தோர் புல்லியர் முதலாங்
           காழக மனத்தவர் பலரும்.

(இ - ள்.) மொய்த்த பேரொளி திகழும் சக்கரவாளகிரியின் முன்புறத்தில் இயக்கரும் அரக்கரும் வெவ்விய பிசாசர்கணமும் உறையா நிற்பர். எட்டுத்திசைகளினும் திக்குப்பாலகர் எண்மரும் உறைவர். மைபோன்ற காரிருள் மூடப்பட்ட அந்த மலையின் மற்றொருபுறத்தே தம்மைத் தாமே கொலை செய்து கொண்டோரும் புன்மைக் குணமுடைய தீவினையாளரும் இன்னோரன்ன பலரும் உறையாநிற்பர்.

(வி - ம்.) மொய்யொளி : வினைத்தொகை. மையிருள் - உவமத் தொகை. காழகம் - கறுப்பு; வெகுளி.

(474)

 பெரும்புற வேலை யப்புறத் தண்டப்
           பித்தியோ டாடக வரைகா
 றிரும்புவிக் கைம்ப தேன்றகோ டியும்பாத்
           தறைந்தனம் விண்ணும்பாத் தறைவாம்
 இரும்புவ லோகந் தரைக்குமேற் பதினைந்
           திலக்கமென் றூழுல கிலக்கம்
 வரும்பனிக் கதிர்மே லிலக்கமே லிலக்கம்
           வானமீன் புதன்மிசை யிரட்டி.

(இ - ள்.) பெரும்புறக் கடலுக்கு அப்பாலமைந்த அண்டச் சுவரோடு முதல் பொன்மலை வரையில் பெரிய நிலவுலகிற்கியன்ற ஐம்பதுகோடி யோசனை தூரத்தினையும், ஈண்டு வகுத்துக் கூறினேம். இனி வானத்தின் உயரத்தையும் வகுத்துக் கூறுவேம் கேட்பாயாக. இந்நிலவுலகத்திற்குமேல் பெரிய புவலோகம் பதினைந்து நூறாயிர யோசனை யென்ப. அப்பால் ஞாயிற்றுலகம் நூறாயிர யோசனை என்ப. அப்பால் திங்கள் உலகம் நூறாயிர யோசனை என்ப. அப்பால், விண்மீன் உலகம் நூறாயிர யோசனை; அப்பால் புதனுலகம், இருநூறாயிர யோசனையில் உளதென்ப.

(வி - ம்.) என்றூழ் - ஞாயிறு. பனிக்கதிர் - திங்கள்.

(475)

 இவ்விரண் டிலக்க மும்பரின் வெள்ளி யிலகுசேய் சுரர்குரு சனியும்
 கௌவிவா "லக மப்புறத் திலக்கங் காழிலேழ் மாதவ ருலகம்
 செவ்விய துருவ னுலகமே லிலக்கந் திகழ்புவ லோகமுற் றமைந்த
 ஒளவிய மனுக்கிந் திரனர சாளுஞ் சுவலோக மெண்பத்தைந் திலக்கம்.

(இ - ள்.) இனி அப்பால் மேலே வெள்ளியுலகமும் விளங்குகின்ற செவ்வாயுலகமும், வியாழனுலகமும், சனியுலகமும் தனித்தனி இருநூறாயிரம் இருநூறாயிரம் யோசனை தூரத்தே உளவாம்; காழ்ப்பில்லாத