பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்617

ஏழுமுனிவர் உலகம் அதற்கப்பால் நூறாயிர யோசனை தூரத்தே யுளது. அதற்குமேல் செம்மையுடைய துருவலோகம் நூறாயிரயோசனை தூரத்தேயுளது. அதற்குமேல் திகழாநின்ற புவலோகம் பொருந்தியுளது. அழுக்காற்றைக் கெடுக்கும் இந்திரன் அரசாளும் சுவலோகம் அதற்குமேல் எண்பத்தைந்து நூறாயிரயோசனை தூரத்தே யுளதென்ப.

(வி - ம்.) சேய் - செவ்வாய். ஒளவியம் - அழுக்காறு. அனுக்குதல் - கெடுத்தல்.

(476)

 மாதவர் மரீசி முதலியோர் பயிலு மாலோக மேலிரு கோடி
 மேதகு பிதிரர் வதிசன லோக மேலிரு நான்குமே லீரா
 றேதமில் சனக ராதியர் தவிரு மிருந்தவ லோகமே லீரெட்
 டோதயற் கரிக்கு நான்குமே லிறைக்கா றூங்குறுஞ் சத்திய வுலகில்.

(இ - ள்.) அதற்குமேல் மரீசி முதலிய பெரிய முனிவர் வாழும் மகாலோகம் இரண்டுகோடி யோசனை யுயரத்தேயுளது. மேன்மை தக்கிருக்கும் பிதிரர் வாழும் சனலோகம் அதற்குமேல் எட்டுக்கோடி யோசனை யுயரத்திலிருக்கும். அதற்குமேல் குற்றமற்ற சனகர் முதலியோர் உறையும் தவலோகம் பன்னிருகோடி யோசனை யுயரத்தேயுளது. அதற்குமேல் பதினாறுகோடி யோசனை யுயரத்தே சத்தியலோகமுளது. அதற்குமேல் பிரமலோகமும் அதற்குமேல் நான்குகோடி யோசனை யுயரத்தே திருமாலுலகமும் அதற்கு ஆறுகோடி யோசனையுயரத்தே இறைவன் வதியும் சிவலோகமுமுள்ளன.

(வி - ம்.) மரீசி முதலிய மாதவர் என்க. தவிர்தல் - தங்குதல். இறை - சிவன். ஊங்கு - இவ்விடத்தே.

(477)

 உம்பரி னண்டப் பித்திகை யொடுமண் ணுலகுகா றைம்பது கோடி
 கும்பமா முனிவ குறிக்கொள்வெவ் வேறு கூறுமெவ் வுலகினு மேலாய்
 நம்பிரான் வதியப் படுஞ்சிவ லோக நண்ணெழில் சொல்லினுக் கடங்கா
 தம்பர்வாழ் குநர்தந் தன்மையிற் றன்ன மரிறபத் தெரிக்குது மறிமோ.

(இ - ள்.) மேலுள்ள அண்டவோடு தொடங்கி மண்ணுலகம் வரையில் ஐம்பதுகோடி யோசனையளவு என்று அகத்தியனே தெரிந்து கொள். இனி வேறுவேறாகக் கூறப்பட்ட எல்லா வுலகினுக்கு மேலாகி எம்பெருமான் சிவன் உறையப்பட்ட சிவலோகம் பொருந்தியுள்ள அழகு சொல்லினுக்கு அடங்கமாட்டாது. அச்சிவலோகத்தே வாழ்பவர் இயல்பினில் ஒருசிறிது குற்றமறக் கூறுவேம்
அறிந்துகொள்.

(வி - ம்.) நம்பிரான் - சிவபிரான். அம்பர் - அங்கு. தன்னம் - சிறிது. அரில் - குற்றம். மோ : முன்னிலையசை.

(478)

வேறு

 பல்வேறு விலங்குபற வையினுருக்கொள்
           பல்வேறு கணமொவ் வோர்பால்