| சில்வேறு கணமொருவாண் முகத்தபல | | முகத்தவவை செறிவொவ் வோர்பால் | | நல்வேறு திருவுருவந் தனவொருபா | | னகுமுருவத் திறத்த வோர்பால் | | அல்வேறு படுமுளத்துக் குறைவின்றிங் | | ஙனஞெமிர்ந்த வனந்த கோடி. |
(இ - ள்.) பல வேறுவகையான விலங்குகள் பறவைகள் உருவங்களைக் கொண்டுள்ள பலவேறு கூட்டத்தினர் ஒவ்வொரு பகுதியிலே வாழ்வர். சிலவாகிய வேறுவகைக் கணம் ஒன்றுபோன்ற ஒளிமுகம் படைத்தனவாம். பலவேறு வகை முகம்படைத்த கணம் பல. இவை ஒவ்வொரு பகுதியிலே தனித்தனி வாழும். நல்ல வேறுவேறு வகையான அழகுடையன ஒரு பகுதியிலிருக்கும். விளங்கும் அழகுடையன ஒருபாலுறையும். இவையல்லாத வேறுபட்ட உளமுடையோர்க்கு அச்சிவலோகத்தே உறையுளில்லை. இவ்வாறு செறிந்த சிவகணங்கள் முடிவற்றகோடி கோடியாம். (வி - ம்.) உறைவு - உறையுள். ஞெமிர்ந்த - செறிந்த. (479) | செம்பவள வொளிவிரிக்குந் திருவுருவுஞ் | | சடைமுடியுந் திகழ்வெண் ணீறும் | | வெம்புலித்தோ லுடையுநுதல் விழியுமழு | | வேலிவற்றின் விளங்குங் கையும் | | அம்புயமோ ரீரிரண்டு மமலனடி | | தைவருமுள் ளகமுஞ் சீர்ப்பப் | | பம்புகண நாயகராய்த் தொழுதேத்து | | மடியர்களும் பலரே யாங்கண். |
(இ - ள்.) அந்தச் சிவலோகத்தின்கண், சிவந்த பவளம்போன்று ஒளிவீசாநின்ற அழகிய திருமேனியும், சடைமுடியும், விளங்காநின்ற திருநீறு சண்ணித்த திருமேனியும், வெவ்விய புலித்தோல் ஆடையும் நெற்றிக்கண்ணும், மழு முத்தலைச்சூலம் என்னும் இவற்றோடு திகழ்கின்ற கைகளும் அழகிய நான்கு தோள்களும் இறைவன் திருவடியை வருடாநின்ற நன்னர் நெஞ்சகமும் என்னும் இவை மாண்புறாநிற்பப் பரவிய சிவகணத் தலைவராக இறைவனைத் தொழுதேத்தாநின்ற மெய்யடியாரும் பற்பலர் உளராவர். (வி - ம்.) நுதல்விழி - நெற்றிக்கண். வேல் - ஈண்டு முத்தலை வேல்; சூலம். அம்புயம் - அழகிய தோள். தைவருதல் - தடவுதல். ஆங்கண் - அவ்விடத்தே. (480) | காலையிளஞ் சுடர்கோடி யுதித்தனைய | | கதிர்மணித்தேர் கடவிச் சென்று | | சோலைகமழ் புறநகரு மகநகரு | | மங்கலங்க டுவன்ற மின்னார் |
|