(வி - ம்.) ஓசைவளி எனமாறுக. ஓட்டம் - உதடு. வையிலை வேல் ஏம் மக எனக் கண்ணழித்து முருகன் என்க. ஏம் - ஏவும். மக - குழவி. (487) | கலைமகளுங் காரத்திற் கண்டத்திந் திரனியமன் கருத்திற் கெண்டைத் | | தலனியக்க ரிமிலருக்கர் சாத்தியர்மார் பினிலனில வாயுத் தாளில் | | நிலவுமருத் துவர்முழந்தாண் மேற்குரத்து நுதிநிகழ்பன் னகர்க ணாப்பண் | | குலவுறுகந் தருவர்கண்டி னரமகளி ருட்குரத்தி னெழுவர் மாதர். |
(இ - ள்.) உங்காரத்தில் கலைமகளும், கழுத்திலிந்திரனும், நெஞ்சிலியமனும், மணிகளிடத்து இயக்கரும், இமிலில் அருக்கரும், மார்பிற் சாத்தியரும், கால்களில் அனிலனாகிய காற்றும், முழந்தாளில் நிலைபெற்ற மருத்துவரும், குளம்பு நுனியில் உரகர்களும், அக் குளம்பின் நடுவில் அளவளாவுதலையுடைய கந்தருவரும், அக்குளம்பின் கண்டத்தே அரமகளிரும், உட்குளம்பிற் பிராமி முதலிய ஏழு தாய்மாரும். (வி - ம்.) கருத்து : நெஞ்சகம், ஆகுபெயர். கெண்டைத்தலம் - மணிகட்டுமிடம். குரம் - குளம்பு. கண்டு - கரடு. (488) | வாலடியி னாகேசர் வான்மயிரி னிரவியொளி யபான மாமா | | தேலவரைப் பலகைதனிற் பிதிரர்வசு தேவர்சந்தி தொறுமேர் வாய்ந்த | | கோலவுருத் திரர்முதுகின் மாதவர்மெய்ம் மயிரினும்பர் குடிஞை நீரில் | | சாலுமயத் தெமுனைதரை மாதுதரத் துததிபயோ தரத்தி னெல்லை. |
(இ - ள்.) வாலின் அடிப்பகுதியில் நாகாதிபரும், வால்மயிரின்கண் ஒளி ஞாயிறும், குதத்தின்கண் திருமகளும் பொருந்தாநிற்ப; அரைப்பலகையில் பிதிரரும், சந்துதொறும் வசுதேவரும், முதுகின்கண் அழகு பொருந்திய உருத்திரரும், உடல்மயிர்தொறும் முனிவரும், மூத்திரத்தில் வான்கங்கையும், மிக்க சாணகத்தின்கண் யமுனையும், வயிற்றின்கண் நிலமகளும், மடியில் கடல்களும். (வி - ம்.) மாமாது - திருமகள். ஏல - பொருந்த. ஏர் - அழகு. குடிஞை - யாறு. தரைமாது - நிலமடந்தை. உதரம் - வயிறு. பயோதரம் - மடி, முலை. (489) | காருகபத் தியமாதி மூன்றழலு முறைவயிற்றிற் காமர் நெஞ்சில் | | சீருமிழும் வதனத்தி லென்பொடுசுக் கிலந்தனிற்செய் மகங்க ளெல்லாம் | | சாருமுறுப் பனைத்தினுங்கற் புடைமகளிர் தங்குவரிச் சாதி யாகிப் | | பாருலவு மானிடத்து மிவ்வாறு தேவரெலாம் பயில்வர் மாதோ. |
(இ - ள்.) காருகபத்தியம், ஆகவனீயம், தக்கணாக்கினீயம் என்னும் மூன்று வேள்வித்தீயும், நிரலே வயிற்றினும், அழகிய நெஞ்சினும், அழகொழுகும் முகத்தினும், என்பினும், கருநீரினும், இயற்றாநின்ற வேள்விகள் அனைத்தும் பொருந்தும். உறுப்புக்கள்தோறும் கற்புடை மகளிர் உறையாநிற்பர். இந்தக் கடவுளான்களின் சாதியாகி இந்நிலவுலகத்திலே |