பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்623

வாழ்கின்ற ஆன்களிடத்தும் இவ்வாறே இத்தேவரெல்லாம் உறையாநிற்பர்
என்றுணர்க.

(வி - ம்.) மாதும் ஓவும் அசைகள்.

(490)

 இத்தகையா வினையியக்கிற் பலாசுறுகோ
           லான்மெல்ல வெறிந்து செல்கென்
 றத்தகையோ ரதனுருவ மறிகின்றோ
           ரரிந்திடுபுல் லருத்திச் சூழ்வோர்
 பத்தியினால் வழிபடுவோர் பாலரனுக்
           காட்டுவோ ரிவர்க ளெல்லாம்
 கொத்துபடு மறன்கடைகண் முழுதிரித்துச்
           சிவலோகங் குறுகி வாழ்வார்.

(இ - ள்.) இத்தகைய சிறப்புடைய ஆவை இயக்குங்கால் பலாசங்கோலால் மெல்லப் புடைத்துச் செல்க! செல்க என்று செலுத்தும் அத்தகைய அன்புடையோரும், அதன் திருவுருவச் சிறப்பினை அறிவோரும், தாமே அரிந்த புல்லினை ஊட்டி அதனை வலம்வருவோரும், அன்போடு வழிபாடு செய்வோரும், அதன் பாலினால் இறைவனுக்குத் திருமுழுக்கு இயற்றுவோரும் என்னும் இவரெல்லாம், கூட்டமான தீவினைகள் அனைத்தையும் கெடுத்துச் சிவலோகத்தை அடைந்து இன்புற்று வாழாநிற்பர்.

(வி - ம்.) செல்கென்ற அத்தகையோர் என்க. கொத்து - கூட்டம். அறன்கடை - தீவினை.

(491)

 தீண்டினுங்கா ணினுங்கரிசு சேணகற்றி
           நல்வினையே செறிப்ப தாகி
 ஈண்டுமரும் பயனுதவி மறுமையினும்
           வேண்டுபய னெளிதி னுய்க்கும்
 காண்டகைய வாவினைக்கண் ணின்றியொறுத்
           துரையுரப்பிக் கலக்கங் காண்போர்
 மாண்டகபி லையினறும்பால் வரதனுக்காட்
           டாதுண்போர் வதிவார் கும்பி.

(இ - ள்.) இத்தகைய ஆன்கள் தம்மைத் தீண்டினும் கண்டாலும் அவர் செய்த தீவினைகளைத் தூரத்தே அகலும்படிசெய்து நல்வினையையே நிரப்புவனவாய் இம்மையினும் பெறற்கரும் பயன்களை அளித்து மறுமையினும் வேண்டும் பயனெல்லாம் எளிதாகவே தரும். காணுந்தகுதியையுடைய ஆவை அன்பின்றி அடித்து வைது துன்பப்படச் செய்வோரும், மாட்சிமையுடைய அவ்வானினது நறியபாலை இறைவனுக்கு ஆட்டாமற் றாமேயுண்போரும் நரகத்தே வீழ்ந்து
கிடப்பர்.