பக்கம் எண் :

624தணிகைப் புராணம்

(வி - ம்.) கரிசு - தீவினை. ஈண்டும் இம்மையினும். கண் - கண்ணோட்டம். உரப்புதல் - அதட்டுதல். வரதன் - இறைவன். கும்பி - நரகம்.

(492)

 இட்டிமுதன் மகவினையிற் சாலைநிரு மித்தியங்கு வாய்தல் கீழ்சார்
 விட்டுவளர் கிழக்காதி நாற்றிசையும் விசையைவிளம் பைங்கோ தானம்
 பட்டகவுட் கடவுணந்தி யொடுசோமன் பயில்கோட்டம் பயிற்றி நந்தி
 அட்டழன்மா காளரைவாய் தலினிருபான் மிசைவயினே றதனை யாக்கி.

(இ - ள்.) செங்கன் முதலியவற்றால் வேள்விச்சாலை யியற்றி, ஆன் இயங்குதற்குரிய வாயில் கிழக்குப் பக்கத்தே விட்டு, வளராநின்ற அக்கிழக்கு முதலிய நான்கு திசைகளினும் நிரலே, கொற்றவைக்கும், சமனை முதலிய ஐந்து ஆக்களுக்கும், மதமொழுகுங் கவுளையுடைய ஆனைமுகக் கடவுளுக்கும் நந்திக்கும், திங்களுக்கும் திருக்கோயில்கள் அமைத்து நந்தியும் அடும் அழலேந்திய மாகாளரும் ஆகிய வாயில்காவற் றெய்வத்தை வாயிலிரண்டு பக்கத்தும் அமைத்து மதிலின்மேல் விடையுருவம் அமைத்து.

(வி - ம்.) இட்டி - செங்கல். சாலை - கோசாலை. விசயை - கொற்றவை. ஐங்கோ - சமனை முதலிய பசுக்கள். தானம்பட்ட கவுளையுடைய கடவுள் - விநாயகன். தானம் - மதம்.

(493)

 கறவையின முதிர்கன்று புனிற்றிளங்கன்
           றுகணோயிற் கன்றும் பால
 உறையுமிடம் வேறுவே றமைத்தொளிருங்
           கண்ணிவாய் தலுநாற் பாலும்
 பெறவியற்றிக் கூவிளம்போ தியினடிமண்
           பெருகுநதி யோடை சேர்மண்
 செறிதருவன் மீகமுமாங் கேய்த்துள்ளா
           லயனரியைச் சிவனைப் போற்றி.

(இ - ள்.) கறக்கும் ஆக்களுக்கும், முதிர்ந்த கன்றுகளுக்கும், ஈன்றணிமையவாகிய இளங்கன்றுகட்கும், நோயால் வருந்துபவற்றிற்கும், கட்டுமிடம் வேறுவேறாக இயற்றி, நான்குதிசையினும் வாயில்களும் கருதியியற்றி, வில்வமரத்தடிமண், அரசமரத்தடிமண், நீர்பெருகும் ஆற்றடிமண், ஓடைமண், செறிந்த புற்றுமண் இவற்றை (ஆனைந்தொடுங்) கூட்டி ஆன்கொட்டிலினகத்தே தூய்மை செய்து, பிரமனும் திருமாலும் சிவபெருமானுமாகிய மும்மூர்த்தியையும் வழிபாடு செய்து.

(வி - ம்.) நோயிற் கன்றும்பால - பிணியால் வருந்துந்தன்மையன. கூவிளம் - வில்வம். போதி - அரசமரம். வன்மீகம் - புற்று.

(494)

 விரைபுகைத்து மலர்மாலை நாற்றிமெல்லச்
           சுவத்தியெனு முரையை விண்டு