பக்கம் எண் :

626தணிகைப் புராணம்

 டானினம் பரிப்போ ருரிஞுகன் னடுவோ
           ரமலனுக் காரியற் கானைத்
 தானமுய்த் தளிப்போ ரிருமதி கன்று
           தழைத்தபின் கறந்திறைக் கேய்ப்போர்.

(இ - ள்.) வேனிற் பருவத்தே சோலைநிழலுடைய இடங்களினும், மிக்க நீரையுடைய கார்ப்பருவத்தே மலைச்சாரல் காடு என்னும் இவ்விடத்தும், பனிப்பருவத்தே ஞாயிறு வெயில் விரித்தற்கேதுவான வெளியிடங்களினும் செலுத்தி முதிர்ந்த துன்பங்களை அகற்றி ஆனினத்தை ஓம்புபவரும், ஆவுரிஞ்சுதறி நடுவோரும், இறைவனுக் காதல் ஆசிரியனுக்காதல் ஆவினைத் தானங்கொடுத்தோரும், கன்றுகள் இரண்டு திங்கள் வளர்ந்த பின்னர் ஆவிற் பால் கறந்து இறைவனுக்கு வழங்குவோரும்.

(வி - ம்.) வேனில் மழை - இமம் என்னும் மூன்றினும் ஆறு பருவமும் அடங்கும். இமம் - பனி. காழிடர் : வினைத்தொகை.

(497)

 செருத்தலான் முறையிற் காத்துறா தவரைச்
           செகுக்கும்வேந் தாதியோர் விடையைப்
 பொருத்திநற் கலன்க ளிறைவனுக் களிப்போர்
           பொலிவறப் பிறருழை நோயால்
 வருத்தமுற் றதனை வாங்கினர் காப்போர்
           வாழ்த்தினர் வணங்குந ரெல்லாம்
 உருத்திகழ் சிவலோ கத்தவ ரவர்கட்
           கொத்தபோ கங்களுண் டிருப்பார்.

(இ - ள்.) மடியினையுடைய ஆக்களை இம்முறையிலே பாதுகாவாதாரைச் செங்கோல்வேந்தன் முதலியோர் கொல்வர், நல்ல பொன்னணி கலன்களாலே விடையை அணிசெய்து இறைவனுக்கு அளிப்பவரும், பொலிவிழந்து நோய்வாய்ப்பட்டுப் பிறரிடத்தே துன்புற்ற ஆவை வாங்கிப் பிணிபோக்கிப் பாதுகாப்பவரும், ஆக்களை வாழ்த்தி வணங்குபவரும் ஆகிய இவரெல்லாம், அழகு விளங்காநின்ற சிவலோகத்தை எய்தி அவ்வுலகோர்க் கமைந்த இன்பங்களை நுகர்ந்திருப்பர்.

(வி - ம்.) செருத்தல் - ஆன்முலை; மடி. வேந்தன் செகுக்கும் என்றது செங்கோல் வேந்தன் செகுத்தல்வேண்டும் என்றவாறு.

(498)

வேறு

 விடையானைக் காவுவித்தோர் வெறுத்தோரே
           றூர்ந்தோரிவ் வினைஞர்க் காதாக்
 கடையோர்கள் கன்றிளைப்பக் கறந்துபால்
            பருகுநர்கள் காவா தோர்கள்